அம்பாறை: சம்மாந்துறையில் மோதல்கள் இடம்பெற்ற வீட்டிலிருந்து சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சய்தாவும் நான்கு வயது மகள் முகமட் ருசானியாவும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சாதியாவிற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருவரும் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அம்பாறை தேசிய வைத்தியசாலையில் கிசிச்சை பெற்றுவருகின்றனர். தாயும் மகளும் பத்துமுதல் 15 வீத எரிகாயங்களிற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவமனையின் பொதுமுகாமையாளர் உபுல்விஜயநாயக்க குண்டு சிதறல்கள் காரணமாக சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருவருக்கும் எரிகாயங்கள் உள்ளபோதிலும் அவர்களின் உயிர்களிற்கு ஆபத்தில்லை என அவர் தெரிவித்துள்ளார். மருத்துவகிசிச்சையில் உள்ள எவரையும் கைதுசெய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.