
அஜ்மீர் அரசர், கரீபே நவாஸ் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 33வது வருட கந்தூரிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும், பொதுமக்களின் நன்மை கருதியும், பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளை கருத்திற் கொண்டும் குறிப்பாக ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் வேண்டுகோளை கருத்திற் கொண்டும் எமது 33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகள் யாவும் காலவரையறையின்றி மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை ஹாஜாஜீ முஹிப்பீன்கள், முரீதீன்கள், பொதுமக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
– நன்றி: ஸ்ம்ஸ் மீடியா