ஒரு கிலோ கிராம் C4 வெடிமருந்துடன், கடற்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது, அதிலிருந்து ஒரு கிலோ கிராம் C4 வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படை பேச்சாளர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில், குறித்த முச்சக்கர வண்டியை கைப்பற்றியுள்ளதோடு, அதில் பயணித்த மூவரை கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.