மோதறை, முகத்துவாரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்? குறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (25) பிற்பகல் கொழும்பு குற்றப் பிரிவு (CCD) அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் (STF) இணைந்து, மோதறை, முகத்துவாரம் வீதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த ஆயுதங்கள் மற்றும் வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்