கொழும்பு: உயிர்த்த ஞாயிறன்று (21) நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பில் 60 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 9 தற்கொலைதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார். 

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயங்களிலும், கிங்ஸ்பெரி ஹோட்டல், சினமன் கிரான்ட் ஹோட்டல், சங்ரீ லா ஹோட்டல் ஆகியவற்றிலும், தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு முன்பாகவுள்ள ட்ரொபிக்கல் இன் ஹோட்டல் மற்றும் தெமட்டகொடை மஹவில கார்டன் ஆகிய 8இடங்களில் உயிர்த்த ஞாயிறன்று (21) குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன.