புறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, குண்டு செயலிழக்கும் பிரிவினரால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தொடர்பாக அடையாளம் காணும் நோக்கில் அவரது விபரங்களை போக்குவரத்துத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். ஆயினும் குறித்த மோட்டார் சைக்கிளில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.