‘மர்ஹூம் ஷைஹூல் பலாஹ் ஞாபகார்த்த பயிற்சி நிலையம்’ அமைக்க நிதி உதவி கோரல்

– பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கீழ் இயங்கி வரும் சம்மேளன நலன்புரி அமைப்பானது காத்தான்குடி பிரதேசத்தில் நேர்வழியை நாடிவரும் சகோதர,சகோதரிகளுக்கான பராமரிப்பு,மார்க்க,கல்வி ரீதியான வழிகாட்டல் மற்றும் பயிற்சிகளை மிக நீண்ட காலமாக வழங்கி வருவதோடு மட்டுமன்றி மேற்படி அமைப்பின் கண்காணிப்பில் இதுவரை கணிசமான சகோதர,சகோதரிகளுக்கு சன்மார்க்க பயிற்சி மற்றும் வாழ்வாதார,வதிவிட,பொருளாதார ரீதியான உதவிகளையும்; வழங்கி வருகின்றன.
எனினும் கடந்த காலங்களை விட தற்போது நேர்வழியை நாடி விரும்பி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அல்லாஹ்வின் உதவியால் அதிகரித்துக் கொண்டு வருவதுடன் இவர்களுக்கான வதிவிடத்துடன் கூடிய பயிற்சிகள் தேவைப்படுவதோடு குறிப்பிட்ட பயிற்சிக்காக வாடகை வீடுகள் பெறப்பட்டு அங்கு பயிற்சி வகுப்புக்கள் தொடராக நடைபெற்று வருகின்றது.
குறித்த பணியினை வினைத்திறனுடன் மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்த போது இவர்களுக்கான தங்குமிட வசதியுடன் கூடிய ஒரு பயிற்சி நிலையத்தின் தேவை கட்டாயம் என உணரப்பட்டுள்ளது.
அந்த வகையில் மர்ஹூம் ஷைஹூல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள் காத்தான்குடி பிரதேசத்திற்கு ஆற்றிய மகத்தான பணியினை நினைவு கூரும் வகையில் ‘மர்ஹூம் ஷைஹூல் பலாஹ் ஞாபகார்த்த பயிற்சி நிலையம்’ என்ற பெயரில் மேற்படி பயிற்சி நிலையத்தினை ஆரம்பிப்பதென தீர்மானித்து காத்தான்குடி பிரதேச தனவந்தர்களினதும்,கொடையாளிகளினதும் ஒத்துழைப்போடு நிதி சேகரிக்கப்பட்டு அதற்கான காணியும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று மாடி கட்டிடத்துடன் வதிவிட பயிற்சி நிலையம் அமைப்பதற்கு சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன் வதிவிட பயிற்சி நிலையம் 9300 சதுர அடியாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு ஒரு சதுர அடிக்கான செலவாக ரூபா 4000.00 மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ‘மர்ஹூம் ஷைஹூல் பலாஹ் ஞாபகார்த்த பயிற்சி நிலையம்’ அமைப்பதற்கு நிதி உதவி வழங்கி தங்களது மறுமைக்கான முதலீட்டினை செய்ய விரும்புவோர் காரியாலய நேரங்களில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தில் தங்களது நிதி உதவிகளை வழங்குமாறும்,வங்கி ஊடாக தங்களது நிதி உதவிகளை வழங்க விரும்புவோர் கணக்கு இலக்கம் 065100110068292 – சம்மேளனம்-காத்தான்குடி என்ற மக்கள் வங்கி கணக்கு இலக்கம் ஊடாக வழங்க முடியும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 
0652246603,0776340150,0773515988,0777673025,0779355995 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s