நாயுடன் குள்ள மனிதன் சண்டையிட்டதை கண்டு அதிர்ச்சி!

கலகெதர: இலங்கையில் கலகெதர உட்பட்ட பகுதியில் இரவு நேரத்தில் சுமார் 2 அடி உயரமுள்ள குள்ள நபர்கள் நடமாடுவதாகவும், அங்குள்ள வயல்வெளி பகுதிகளில் இந்த நடமாட்டம் காணப்படுவதாகவும்  பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், கருணாதிலக் என்ற விவசாயி தனது தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்கு காவலாக கடந்த பெப்ரவரி 2 ம் திகதியன்று வயல்வெளிக்கு சென்ற சமயத்தில், இளைப்பாறுவதற்காக அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருந்துள்ளார்.

அப்போது, சுமார் இரண்டு அடி உயரமுள்ள, நீளமான தலைமுடிகளுடன், சிவப்பு நிறத்துடன் கூடிய முகம் மற்றும் உதடுகள் கொண்ட உருவம் தென்பட்டுள்ளது. கருணாதிலக் அதனை பார்த்து யார் நீ என்று கேட்டதற்கு, எந்த விதமான பதிலை தெரிவிக்காமல், கருணாதிலக்கை உற்றுநோக்கி பார்த்துக்கொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் பதறிய அவர் அங்கிருந்து கிராமத்திற்கு சென்று உதவிக்கு ஆட்களை அழைத்து வருவதற்குள் அங்கிருந்து குறித்த விசித்திர உருவம் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அங்குள்ள காலடி தடங்கல் அனைத்தும் அந்த வினோதமான ஏலியனை ஒத்து இருந்தது என்று தெரிவித்தார்.

மேலும், அடிக்கடி பறக்கும் தட்டுகள் போன்று சில விநோதங்கள் நடைபெறுவதாக அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வுகள் அல்லது வானியல் ஆராய்ச்சி மையங்களில் இருந்து எந்த விதமான பதிலோ அல்லது விளக்கமோ தற்போது வரை வெளியிடப்படாத நிலையில், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த தகவலானது ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அங்குள்ள கலகெதர உட்பட்ட பகுதியில் குள்ள மனிதர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும், சம்பவத்தன்று பெண்ணின் வீட்டில் இருந்த நாய் குரைத்து கொண்டு இருப்பதை கண்ட பெண் வெளியே சென்று பார்த்த போது நாயுடன் குள்ள மனிதன் சண்டையிட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில், அலறிய படியே அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்ததை அடுத்து அங்கிருந்து குள்ள உருவமானது தப்பி சென்றுள்ளது. மேலும் குறித்த அந்நாய் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. அதே போன்று அங்குள்ள பிற பகுதியில் இரவு ஒரு மணியளவில் குள்ள உருவமானது ஒரு வீட்டின் கதவை தட்டவே, இதனை கண்ட மக்கள் உடனடியாக அதனை தாக்குவதற்கு முற்பட்ட போது அந்த குள்ள உருவம் சுமார் 10 அடி தூரத்திற்கு தாவி சென்று உள்ளது. குறித்த இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s