“ரபேல் விமானம் மட்டும் இருந்திருந்தால் கதையே வேறு”-மோடி

modiடெல்லி: ரபேல் விமானம் மட்டும் நமது கையில் இருந்திருந்தால் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்று இந்திய பிரதமர் மோடி பேசி இருக்கிறார். “சர்வதேச கட்டுமான தொழில்நுட்ப இந்தியா 2019 ” என்று மாநாட்டில் டெல்லியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் அவர் அரசியல் சார்ந்த விஷயங்கள் நிறைய பேசினார். அதேபோல் காஷ்மீரில் நடந்த  தாக்குதல் குறித்தும், விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். இதில் காங்கிரஸ் மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். Read the rest of this entry »

ஜனாஸா அறிவித்தல்

smp mohideenகாத்தான்குடி-1, ஊர் வீதியைச் சேர்ந்த S.M.P.முகைதீன் அவர்கள் சற்று முன் காலமானார்.”இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”.

அன்னார், ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளரும், காத்தான்குடி சித்தீக்கியா மகளிர் அரபுக் கல்லூரியின் தலைவரும், காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்ஆ பள்ளி வாயலின் முன்னாள் தலைவரும் சமூக சேவையாளரும் ஆவார். Read the rest of this entry »

இலங்கை கிரிக்கெட்டிற்கு 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கியது ஐ.சி.சி

srilanka cricketடுபாய்: சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு மீள வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமையகம் அமைந்துள்ள டுபாயில் (3) இடம்பெற்ற சிறப்பு சந்திப்பின்போதே, இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. Read the rest of this entry »