வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் பிரபல போதைப் பொருள் வியாபாரியான ‘டீ மஞ்சு’ என்பவரது உதவியாட்கள் மூவர் ஹெரோயின் மற்றும் ஹசீஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (06) பிற்பகல், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே ஹேகித்த பிரதேசத்தில் போதைப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பிரபல போதைப் பொருள் வியாபாரியான ‘டீ மஞ்சு’ என்பவரது உதவியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள, வத்தளையைச் சேர்ந்த சுரேஷ் லக்ஷித பெனாண்டோ (31) என்பவரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.