அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் முடிவெடுத்தது ஏன்?

உண்மையில் பாகிஸ்தானின் மனிதாபிமானம் உலகளவில் பேசப்படுவதை இந்திய ஊடகங்களால் பொறுமைகாக்க முடியவில்லை

imranலாஹூர்: இந்தியாவுடனான பதற்றத்தை தணிக்கவும், உறவை சகஜ நிலைக்கு கொண்டுவரவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கையாளும் உத்திகளின் ஒரு பகுதியாகவே இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுவிக்கும் அவரது நடவடிக்கை அமைந்துள்ளது. அபிநந்தனை விடுவிக்கும் முடிவை அறிவித்தபோது இம்ரான்கான் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை, தாம் அழுத்தத்துக்கு ஆளானதாகவும் தெரிவிக்கவில்லை. Read the rest of this entry »

தவறான செய்திகளைப் பரப்பும் இந்திய ஊடகங்கள்

…. அதாவது, இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறும் நாளுக்கு ஓரிரவு முன்பு!

planeலண்டன்: பாகிஸ்தான் மீது இந்தியா வான் தாக்குதல் நடத்துவது போல ஒரு காணொளி வைரலாக பரவி வருகிறது. பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்களும் அதனை ஒளிப்பரப்பின, சமூக ஊடக பயனர்களும் அதனை பகிர்ந்து வருகின்றனர். அந்த காணொளியில், இருளில் போர் விமானம் பறப்பது போலவும், நெருப்பை உமிழ்வது போலவும் காட்சிகள் உள்ளன. இந்த காணொளி செவ்வாய்க்கிழமைக்கு முன்பே எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. Read the rest of this entry »

விமானத்தை கடத்திய நபர் சுட்டுக்கொலை

planeடாக்கா: டாக்காவில் இருந்து துபாய்க்கு பறந்த விமானத்தை கடத்திய மர்ம நபரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட பிமன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான BG147 ரக விமானத்தை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் கடத்தினார். சிட்டாகாங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து 148 பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்களை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். ஆனால் 2 விமானிகள் அந்த மர்ம நபரின் பிடியில் சிக்கினர். Read the rest of this entry »

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ள பொலிஸார்

smokeகொழும்பு: இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.கொழும்பு, கொள்ளுபிட்டி பகுதியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பின்போதே, இந்த ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். Read the rest of this entry »

ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்தல்

  • றியாத் ஏ. மஜீத்

52595398_2422827251121532_1052887064833425408_nஅட்டாளைச்சேனை: தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) மாதாந்தக் கூட்டமும் அங்கத்தவர்களின் பெயர் விபரங்களை கணனிப்படுத்தல் மற்றும் ஒன்லைன் ஊடாக ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்தல் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இன்று சனிக்கிழமை (23) மாலை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை மண்டபத்தில் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்றது. Read the rest of this entry »

புதிய சாதனை படைத்த ஆப்கானிஸ்தான்

afghanistanடேராடூன்: ஆப்கானிஸ்தான் அணி, டி-20 கிரிக்கெட் போட்டியில் 278 ரன்கள் எடுத்து, சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் டேராடூன் நகரில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடரில், அயர்லாந்து அணிக்கு எதிராக சனிக்கிழமை நடந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. இதற்கு முன்பு, 2016-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி எடுத்த, 263 ரன்கள் (3 விக்கெட் இழப்புக்கு) என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் முறியடித்துள்ளது. Read the rest of this entry »