ரோஸ் டெய்லரின் சாதனை

ross-taylorசாக்ஸ்டன் ஓவல்: நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் இலங்கை அணிக்கு எதிராக 137 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். ரோஸ் டெய்லர் ஒருநாள் போட்டிகளில் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். தற்போது நடந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் கலக்கி வருகிறார். இலங்கை அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஸ் டெய்லர் 137 ரன்கள் அடித்து தன் 20வது சர்வதேச ஒருநாள் போட்டிகள் சதத்தை கடந்தார். நியூசிலாந்து வீரர்களிலேயே அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். Read the rest of this entry »

லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் விமானசேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்

  • MJ

london heathrowலண்டன்: ஐக்கிய இராச்சியத்தின் பிரதான விமானநிலையமான லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் விமானம் புறப்படும் ஓடு பாதையில் ஆளில்லா விமானம் ஒன்று தோன்றியதை அடுத்து, புறப்படும் விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஹீத்ரோ விமானசேவைகள் பிரிவு அறிவித்திருக்கிறது. Read the rest of this entry »

தப்பிச்சென்று புகழிடம் கோரியுள்ள சவுதி யுவதி

saudi-thailandபேங்கொக்: சவுதி அரேபியாவிலிருந்து தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவர்களுக்குத் தெரியாமல் தப்பித்து தாய்லாந்து வந்து சேர்ந்த 18 வயதுப் பெண் பேங்கொக் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிவிட்டதாக தெரிவித்த தாய்லாந்து குடியேற்றதுறை அதிகாரிகள் அவர் ஐ.நா. அகதிகள் முகமையின் பாதுகாப்பில் இருப்பதாக குறிப்பிட்டனர்.தாய்லாந்து குடியேற்ற போலீஸ் தலைவர், “ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தாய்லாந்து விமானநிலையத்திலிருந்து புறப்பட்டார்” என கூறி உள்ளார். Read the rest of this entry »