ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். அதன்படி  மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி, மத்திய மாகாண ஆளுநராக சத்தேந்திர மைத்ரி குணரத்னவும், வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்கவும், வடமேல் மாகாண ஆளுநராக பேசல ஜயரத்ன பண்டாரவும், கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கது.