சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அயர்லாந்து A அணிக்கும் இலங்கை A அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடர் மற்றும் உத்தியோகபூர்வமற்ற 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகிய போட்டிகளுக்கான இலங்கை குழாமில் மொஹம்மட் சிராஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
வலது கை வேகப்பந்து வீச்சாளரான சிராஸ் கண்டி, மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார்.
BRC அணிக்காக விளையாடி வரும் சிராஸ் இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் மேஜர் எமர்ஜிங் லீக் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதேவேளை கடந்த வருடம் இடம்பெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான ரி20 போட்டிகளில் ஜோன் கீல்ஸ் அணிக்காக விளையாடிய சிராஸ் 2 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற 23 வயதின் கீழான மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.