அரசில் இருந்து விலக தாங்கள் தயாராக இருப்பதாக மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றம் சற்று முன்னர் வழங்கிய தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதியுடன் பேசிய பின்னரே, தாங்கள் அடுத்த முடிவினை எடுக்க தீர்மானிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.