கொழும்பு : ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டனர். மேல் மாகாண சபை உறுப்பினர்களான நௌசர் பௌசி மற்றும் கீர்த்தி காரியவசம் ஆகியோரே இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளனர்.