மாவனல்லை ஸாஹிரா கத்தார் கிளைக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம்!

zahira mawanellaடோஹா: மாவனல்லை ஸாஹிரா கல்லாரியின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை இலங்கை தூதரகத்தின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை திஸம்பர் மாதம் 02ஆம் திகதி கட்டார் நாட்டிற்கான இலங்கை தூதுவர் மாண்புமிகு திரு. பி.டி.பி.எஸ்.ஏ. லியனகே அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டது. கட்டார் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. முகம்மத் லாfபிர், பொதுச் செயலாளர் திரு. அகமத் முனாப், உதவி பொருளாலர் திரு. மிfப்ரா ஹனிபா, நிர்வாக குழு உறுப்பினரான அப்துல் மலிக் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Read the rest of this entry »

7 நாட்களுக்குள் தீர்வு : ஜனாதிபதி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு எதிர்வரும் 7 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மேளனம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (4) இடம்பெற்றது. இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். Read the rest of this entry »

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து இருவர் ஐ.தே.க.வுக்கு தாவல்

கொழும்பு : ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டனர். மேல் மாகாண சபை உறுப்பினர்களான நௌசர் பௌசி மற்றும் கீர்த்தி காரியவசம் ஆகியோரே இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளனர்.