காத்தான்குடி அஷ்ஷைக் பாஷில், அக்குறனை மபாஸ் முப்தி ஆகியோரால் எழுதப்பட்டு அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற நூல் வெளியீடு

49017815_971705763028201_8921049422033321984_oகொழும்பு: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் 2009ம் ஆண்டு உலமாக்களுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட நூல் எழுதும் போட்டியில் முதலாம் இடம் பெற்ற “சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை” எனும் மேற்படி நூல், அதன் பெறுமதியை உணர்ந்து பலரின் வேண்டுகோளுக்கிணங்க அல்லாஹ்வின் உதவியால்  30.12.2018 காலை தெஹிவளை முஹைதீன் ஜும்ஆப் பள்ளியில் வெளியீட்டு வைக்கப்பட்டது. Read the rest of this entry »

பெருங்குடல் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

human bodyபெருங்குடல் புண் என்பது பெருங்குடலின் உட்சுவற்றிலும், மலக்குடலின் உட்சுவற்றிலும் புண்களை உண்டாக்கும் ஓர் நிலை. இதனால் பெருங்குடல் மற்றும் மலக்குடல் சிவப்பாக, வீக்கத்துடன் இருப்பதோடு, கடுமையான வேதனையைத் தரும்.ஆரம்பத்தில் வயிற்று வலியில் ஆரம்பித்தாலும், நிலைமை மோசமாகும் போது இதன் அறிகுறிகளும் தீவிரமாக காணப்படும். இங்கு உங்களுக்கு பெருங்குடல் புண் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. Read the rest of this entry »

ஐக்கிய இராச்சிய வாழ் காத்தான்குடி உறவுகளின் மாபெரும் ஒன்றுகூடல்

kattankudy-uk.6.jpg8– நமது நிருபர்

லண்டன்: ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்துவரும் காத்தான்குடி உறவுகளின் 7வது ஒன்று கூடல் 27-12-2018 வியாழக்கிழமை Luton நகரில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பிற்பகல் ஒரு மணியிலிருந்து இரவு பத்துமணிவரை இடம்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஐக்கிய இராச்சியத்தில் பரந்து வாழும் காத்தான்குடி உறவுகள் மிக ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர். Read the rest of this entry »

“இஸ்லாமும் தீவிரவாதமும்”

கத்தார் வாழ் காத்தான்குடி சமூக அங்குரார்ப்பண ஒன்றுகூடல்

  • நமது நிருபர்

qatarடோஹா: கத்தாரில் வாழும் காத்தான்குடி சகோதரர்களின் பிரமாண்டமான முதலாவது ஒன்றுகூடல் இன்ஷாஅல்லாஹ் இன்று 21-12-2018 கத்தார், அல் சஹாமாவில் விமர்சையாக இடம்பெற இருக்கிறது. காத்தான்குடியையும் அதன் அண்மிய ஊர்களையும் வசிப்பிடமாகக் கொண்ட எம் உறவுகள் குடும்ப சகிதம் தங்களைது மகிழ்ச்சையைப் பகிர்ந்துகொள்ளும் ஓர் அரிய வாய்ப்பாக இந்நிகழ்வு அமைய இருக்கிறது.
Read the rest of this entry »

காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள சகல பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் வழங்க ஏற்பாடு

.எல்.டீன்பைரூஸ்

காத்தான்குடி: காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்; சகல பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர் (18.12.2018 செவ்வாய்) இன்று முதல்  மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிமனையூடாக வலயத்தின சகல பாடசாலை அதிபர்களிடம் வழங்கப்படுவதாக காத்ததான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் எம்..சீ.எம்.பதுர்தீன் தெரிவித்தார். Read the rest of this entry »