கொழும்பு : அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 33ஆவது சரத்தின்படியே, நாடாளுமன்றத்தைக் கலைத்ததாகவும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இந்த சரத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்தார். எனவே, அரசியலமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக சட்டமா அதிபர் தெரிவித்தார். I

இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அடிப்படை உரிமை மனுக்களை டிசம்பர் 4, 5, 6 ஆம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நவம்பர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைக்க வர்த்தமானி மூலம் உத்தரவிட்டார்.

இதனையத்து ஜனவரி 05ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் ஜனாதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.