மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு

hizbullahகொழும்பு: இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் பெலவத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. Read the rest of this entry »

தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட ஜேவிபி விருப்பம்

ஜேவிபியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஒடுக்குமுறை அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினரை தெற்கிலும் வடக்கிலும் பிரதிநிதித்துவம் செய்கின்றன என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக இணைந்து போராடவேண்டிய கடமை எங்களுக்குள்ளது என குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »

அமெரிக்காவில் தஞ்சம் கோருவதற்கு தடை விதிக்கும் டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

america usaவாஷிங்டன் DC: அமெரிக்காவின் தென்பகுதி வழியாக அகதிகளாக நுழைவோர் அந்நாட்டில் புகலிடம் கோருவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த தடையுத்தரவை விலக்கி சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க மனித உரிமை குழுக்களின் வாதங்களை கேட்ட சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜான் டிகர், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையுத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். Read the rest of this entry »

இரண்டு மணி நேரம் இடம்பெற்ற சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு

ranil maithiriகொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது. Read the rest of this entry »

எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறாமல் பணியாற்றிய ஆளுநர்

nigeriaஅபுஜா: நைஜீரியாவின் தென் மேற்கில் உன்ள ஓஷுன் நாட்டின் ஆளுநர், தான் பணியில் இருந்த எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறவில்லை என்று கூறியுள்ளார். தற்போது அவர் பணியில் இருந்து விடைபெறும் நேரத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார். ஓஷுன் ஆளுநர் ராவுஃப் அரெக்பெஸோலா ஒரு கூட்டத்தில் பேசும்போது, இந்த நாடு தனக்கு சாப்பாடு போட்டு, வாகனங்கள் அளித்து, தங்க இடமும் வழங்கியுள்ளதால், பணத் தேவை இருக்கவில்லை என்று தெரிவித்தார். Read the rest of this entry »

சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு

பாராளுன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். நாளை (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு  இடம்பெறவுள்ளது. Read the rest of this entry »