“மகிந்தவை பிரதமர் பதவியில் அமர்த்தி புதிய அரசாங்கத்தை அமைப்பதைத் தவிர வேறு வழி எனக்கில்லை” – ஜனாதிபதி

ranil maithiriகொழும்பு: மகிந்த ராஐபக்ஷவை பிரதமராக நியமித்தது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நல்லாட்சி அரசாங்கம் எனும் கருப்பொருளை ரணில் விக்கிரமசிங்க மிக வெளிப்படையாகவே துஷ்பிரயோகம் செய்துவிட்டார்” என சிறிசேன குறிப்பிட்டுள்ளார். “ரணில் விக்கிரமசிங்க பொதுவாகவே கூட்டுச் செயற்பாடற்ற, தன்னிச்சையான தீர்மானங்ளை எடுக்கும் முரட்டுத்தனமான பிடிவாதமிக்க முறையிலேயே அரசாங்கத்தில் செயற்பட்டார்; அவரின் நடவடிக்கையால் நாட்டில் ஊழலும் மோசடியும் தலைதூக்கின” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read the rest of this entry »

“கொழும்பு கப்பல்தளத்தை இந்தியாவுக்கு தர மறுத்ததே ரணிலை அகற்றுவதற்கான காரணம்”

ranilகொழும்பு: கொழும்பு மேற்கு கப்பல் தளத்தை இந்தியாவுக்குத் தருவதற்கான பரிந்துரை நிராகரிக்கப்பட்டது பிரதமர் மாற்றத்துக்கான தாக்கத்தை செலுத்திய காரணங்களில் ஒன்று என இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த எம்.பி. நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திர கட்சி சார்பில் கொழும்புவில் சனிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இவர், ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவைyk கொல்வதற்கான முயற்சி குறித்து உரிய விசாரணை முன்னெடுக்கப்படாததும் அக்கறை செலுத்தாதும் இந்த மாற்றத்துக்கான காரணிகளில் மற்றொன்று என்று நிமல் குறிப்பிட்டார்.

 

ரணிலிடமிருந்து வாகனங்கள், பாதுகாப்பு பறிப்பு

ranil maithiriகொழும்பு: பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக அதிரடியாக வெள்ளிக்கிழமை நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா. ஆறு எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

திடீர் ஆட்சி மாற்றம் ஏன் ? இது சாத்தியப்படுமா?

mahinda-maithriகொழும்பு: பிரதமர் பதவியிலிருந்து ரணில் ராஜினமா செய்திருக்க வேண்டும். அல்லது ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக ஜனாதிபதியினால் அறிவிப்பு செய்திருக்க வேண்டும். எதுவுமில்லாமல் மஹிந்த ராஜபக்ச பிரதம மந்திரியாக திடீரென நியமிக்கப்பட்ட அறிவிப்பானது நாட்டில் திடீர் அரசியல் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. Read the rest of this entry »

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்

mahinda

சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக் கழக நிர்வாக அலுவலகத்தை ஆக்கிரமித்த மாணவர்கள் கைது

south eastern uniஒலுவில்: கடந்த இரண்டு வார காலமாக, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை போலீஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்கள் அனைவரையும் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read the rest of this entry »