விமானம் ஓட்ட களமிறங்கும் சவுதி பெண்கள்

saudiறியாத்: பொதுவாக சவுதி விமானங்களில் சவுதி பெண்கள் பணியாற்ற மாட்டார்கள். பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து  இதற்காக பெண்கள் பணிக்கு அழைத்து வரப்படுவார்கள். விமானியாக படித்த சவுதி பெண்கள் கூட அங்கு விமானியாக பணியாற்றியது இல்லை. இந்த நிலையில்தான் தற்போது பெண்கள் சவுதி அரேபியாவில் விமானம் ஓட்டுவதற்கு அதிக அளவில் முன்வந்து இருக்கிறார்கள். Read the rest of this entry »

உலகில் இடம்பெற்ற மிகப்பெரும் போர் ஒத்திகை

  • SHM

russia3434-1536902976[1]மொஸ்கோ: ரஷ்யா உலகின் மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்தி சாதித்து காட்டி இருக்கிறது. இது உலகம் முழுக்க தற்போது போர் பதற்றத்தை உண்டாக்கி உள்ளது. ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், பனிப்போர் கொடுத்த மிக முக்கிய உலக தலைவர்களில் முதன்மையானவர். உளவாளியாக இருந்து நாட்டின் உணர்வுகளை புரிந்து கொண்டதால்தான் என்னவோ இவரை ஆட்சியில் இருந்தோ, அரசியல் பொறுப்பில் இருந்தோ யாராலும் நீக்க முடியவில்லை. Read the rest of this entry »

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு புல்மோட்டை காணி பிரச்சினை தொடர்பாக அனைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியத்தினால் அவசர மகஜர் அனுப்பி வைப்பு

41725408_10216450390641934_5503551881705684992_n– எம்.ரீ. ஹைதர் அலி

புல்மோட்டை: புல்மோட்டை முஸ்லிம்களின் காணிகளில் இடம்பெற்றுவரும் பௌத்த மதகுருவின் அத்துமீறல் மற்றும் பிரதேச மக்களின் நீண்ட கால காணி பிரச்சினை தொடர்பாக தீர்வுகளை பெற்றுத்தரும்படியான மகஜர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்மகஜர் புல்மோட்டை அனைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியத்தினால் பதிவுத் தபால் மற்றும் தொலை நகல் ஊடாகவும் 14.09.2018ஆம் திகதி – வெள்ளிக்கிழமை (இன்று) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

அமெரிக்காவைத் தாக்கும் ஃபுளோரன்ஸ் சூறாவளி

wind air seaநியுயோர்க்: அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்கத் தொடங்கியுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களின் உட்புறங்களை நோக்கி இந்த சூறாவளி இப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஃபுளோரன்ஸ் சூறாவளி அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்லலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வியாழன் இரவு முதல், வீடுகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். Read the rest of this entry »