(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நாளை 07ம் திகதி வெள்ளிக்கிழமை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரங்களில் வியாழேந்திரனும்  தியேட்டர்  மோகனும்  மட்டக்களப்பு  மாவட்டத்தில் இணைந்து  விதைக்கும்  இனவாத  நிர்வாகப்  பயங்கரவாதத்திற்கு எதிர்ப்புத்  தெரிவிக்கும்  ஹர்த்தால் அழைப்பு,கரிநாள் அனுஷ்டிப்பு,அன்பார்ந்த மட்டக்களப்பு மாவட்ட பொது மக்களே போன்ற தலைப்புக்கள் இடப்பட்டு ஹர்த்தால்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன்,ஊடகங்களுக்கும் துண்டுப்பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரங்கள் பின்வருமாறு…………