காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியில் கணித விஞ்ஞானப் பிரிவு தொடக்கி வைப்பும், புதிய மாணவர்கள் அனுமதியும்

– எம்.ரீ. ஹைதர் அலி

காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரி “மார்க்கப் பின்புலம் கொண்ட துறைசார் அறிஞர் சமூக உருவாக்கம்” என்ற தூரநோக்கோடு கடந்த 2017 ஆம் ஆண்டு உயர் தரப் பிரிவை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.

சுமார் 75 மாணவர்கள் உள்வாரியாகவும் 200 மாணவர்கள் வெளிவாரியாகவும் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கலை, வர்த்தகம், இயந்திரவியற் தொழிநுட்பம் என்பவற்றோடு மார்க்க அடிப்படை விடயங்களும் குறித்த மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு வருகின்றமை அல்-மனாரின் சிறப்பம்சமாகும்.

அதன் ஓர் அங்கமாக மாணவர்களின் நலன் கருதி இவ்வருடம் கணித, விஞ்ஞானப் பிரிவு தொடக்கி வைக்கப்படுகின்றது. க.பொ.த உயர்தர கணித, விஞ்ஞானப் பிரிவுக்கு 02 ஆம் மற்றும் 03ஆம் தடவைகள் தோற்றவுள்ள மாணவர்களுக்கு வடிவமைக்கப்பட்ட இப்பாடநெறியில் முன்னனி ஆசிரியர் குழாத்தின் வழிகாட்டலுடன் பண்பாட்டியல் பயிற்சி நெறிகளுடன் கூடிய ஆரோக்கியமான சுய கற்றல் சூழலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பாடநெறிக்கு குறிப்பிட்டளவு மாணவர்களே இணைத்துக் கொள்ளப்படவுள்ளமையால் உங்கள் பதிவுகளை எதிர்வரும் 05.09.2018 – புதன்கிழமைக்கு முன்னர்  மேற்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

அஷ்ஷெ்ய்க். எஸ்.எம். சனூஸ் நளீமி,

விரிவுரையாளர்,

அல்-மனார் அறிவியற் கல்லூரி

தொலைபேசி 077 7883949, 065 2245797

2 thoughts on “காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியில் கணித விஞ்ஞானப் பிரிவு தொடக்கி வைப்பும், புதிய மாணவர்கள் அனுமதியும்”

 1. உயர்தர மாணவர்களுக்காக தனியார் கல்வி நிலையமொன்றால் மட்டு நகரில் காட்சிப் படுத்தப்பட்ட விளம்பரம் ஒன்றே இது!!!!!

  ஒரு வைத்தியர் Chemistry படிப்பிக்கிறார் என்று பலரும் ஆச்சரியப்பட்டிருக்கலாம்.
  ஆனால், குறித்த நபர் மருத்துவ பீடத்தின் 3 ம் வருட கற்கைகளைக் கூட இந்நாள் வரை பூர்த்தி செய்யாதவர்.
  ஒரு ஆசிரியருக்கான தகுதிகளோ அல்லது ஒரு வைத்தியருக்கான தகுதிகளோ அற்ற நபர்களை தகுதி வாய்ந்த நபர்களாக விளம்பரம் செய்து உயர்தர மாணவர்களை பணத்திற்காக ஏமாற்றும் கைங்கரியமே இது!!!!!!
  இவ்வாறான நபர்களிடமிருந்தும், இவ்வாறான தனியார் கல்வி நிலையங்களிடமிருந்தும் மாணவர்களே அவதானமாக இருங்கள்.

 2. உயர்தர மாணவர்களுக்காக தனியார் கல்வி நிலையமொன்றால் எமது நகரில் காட்சிப் படுத்தப்பட்ட விளம்பரம் ஒன்றே இது!!!!!

  ஒரு வைத்தியர் Chemistry படிப்பிக்கிறார் என்று பலரும் ஆச்சரியப்பட்டிருக்கலாம்.
  ஆனால், குறித்த நபர் மருத்துவ பீடத்தின் 3 ம் வருட கற்கைகளைக் கூட இந்நாள் வரை பூர்த்தி செய்யாதவர்.
  ஒரு ஆசிரியருக்கான தகுதிகளோ அல்லது ஒரு வைத்தியருக்கான தகுதிகளோ அற்ற நபர்களை தகுதி வாய்ந்த நபர்களாக விளம்பரம் செய்து உயர்தர மாணவர்களை பணத்திற்காக ஏமாற்றும் கைங்கரியமே இது!!!!!!
  இவ்வாறான நபர்களிடமிருந்தும், இவ்வாறான தனியார் கல்வி நிலையங்களிடமிருந்தும் மாணவர்களே அவதானமாக இருங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s