“ஆயுத விவகார குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் விடுதலைப் புலிகளிடம் தீவிர விசாரணை அவசியம்” – ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருப்பதாகவும், எனக்கும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும் அதனுடன் தொடர்பு இருப்பதாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சு உரிய விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதை வரவேற்பதாகவும், குற்றச்சாட்டு முன்வைத்த புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் குறித்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி நாட்டுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

“ என்னிடமும், அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடமும் ஆயுதம் இருப்பதாகவும் காத்தான்குடி, மூதூர், கிண்ணியா பகுதிகளில் முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருப்பதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நாங்கள் மிகவும் கவனமாகவும் – நிதானமாகவும் அனுகுவோம். இவ்வாறான கருத்துக்கள் இதற்கு முன்னரும் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், பாதுகாப்பு தரப்பு அதனை முற்றாக நிராகரித்திருந்தது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மூலம் முஸ்லிம் சமூகத்தை பிரச்சினைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்பதே தீவிரவாத – கடும்போக்குவாத அமைப்புக்களின் நோக்கமாகும். நாங்கள் இவ்வாறான விடயத்தை உரிய விசாரணைகள் மூலமே தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இவ்வாறான கற்பனைகள் எதிர்காலத்திலும் சிலருக்கு ஏற்படலாம்.

அரசியல் ரீதியாக எம்மீது கால்புணர்ச்சி கொண்டவர்களும், டயஸ்போராக்களுமே இவ்வாறன சதித்திட்டங்களை எமக்கெதிராக முன்னெடுக்கின்றன. அதற்கு சில சிங்கள இனவாத அமைப்புக்களும் துணைநிற்கின்றன. இதன் விளைவுகள் தெரியாமல் ஊடகங்களும்    செயற்படுகின்றன.

நாங்கள் முப்பது வருட கொடூர யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகம், ஆயுத போராட்டதால் ஒரு தலைமுறையின் எதிர்காலம் சீரழிக்கப்பட்டதை நாங்கள் கண் எதிரே பார்த்தவர்கள். ஆகவே, நாங்கள் நாட்டில் மீண்டுமொரு ஆயுதம் போரட்டம் ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன இந்த விடயம் தொடர்பில் கரிசனையோடு உள்ளன. இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தவுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதனை நாங்கள் வரவேற்பதுடன் பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம்.

இவ்வாறான அனுகுமுறை மூலமே எமக்கெதிரான குற்றச்சாட்டை பொய் என நிரூபிக்க முடியும். குற்றச்சாட்டை முன்வைத்த புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களை அழைத்து விசாரணை நடத்தி அவர்கள் தெரிவித்த கருத்து தொடர்பில் தீர விசரணை நடத்த வேண்டும். அவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பிலும் விசாரணை நடத்த வேண்டும்” – என்றார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s