22.08.2018 புதன்கிழமை காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரினால் கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெருநாள் திடல் தொழுகைக்காக வருகை தரவுள்ள சகோதர சகோதரிகளுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ் காலை 6.15 மணிக்கு பெருநாள் தொழுகைக்காக வருகை தரவுள்ள நீங்கள் கீழுள்ள ஒழுங்கு விதிகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
1. நபி(ஸல்) அவர்களின் ஸுன்னாவை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இப் பெருநாள் தொழுகைகள் ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றோம். இதன் மூலமாக மக்கள் நபிகளாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி இத்தொழுகைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். எனவே அதற்கு மாற்றமான செயல்பாடுகளில் ஈடுபடுவதை முழுமையாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
2. எமதூர் கடற்கரை பொழுதுபோக்குவதற்கான பிரதான தளமாக எம்மவர்களால் பார்க்கப்பட்டாலும் பெருநாள் தினத்தில் நீங்கள் அங்கு சமுகமளிப்பது அல்லாஹ்வைப் புகழ்ந்து அவன் கடமையாக்கிய ஓர் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக என்பதை மனதில் நிறுத்தி அதற்கான பேணுதலுடன் வருகை தருவதே பொருத்தமானது.
3. குடும்பமாக (ஆழவழச டீமைநஇ யுரவழஇ ஊயசஇஏயn) போன்ற வாகனங்களில் வருபவர்கள் நூறானியா மையவாடி வீதி அல்லது யு.டு.ளு. மாவத்தை வீதிகளினூடாக மாத்திரமே வருகை தரவேண்டும். இவ்வாறு வருபவர்கள் ஆண்கள் பகுதிக்குள் தங்கள் வாகனங்களைச் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
4. ஆண்கள் மாத்திரம் வருகைதரும் வாகனங்கள் கடற்கரை (டீயளந ர்ழளிவையடஇ யுட-ஆயயெச) வீதியினால் அனுமதிக்கப்படுவர். இவ்வீதியினூடாக திடலுக்கு வருகை தருகின்ற ஆண்கள் பெண்கள் பகுதிக்கு வாகனங்களைச் செலுத்த எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பமாட்டார்கள்.
5. தனிநபர்கள் யுரவழஇஊயசஇஏயn போன்றவற்றை பயன்படுத்தாது மோட்டார் சைக்கில்களை பயன்படுத்துவது வாகன நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க உதவியாக இருக்கும்.
6. தொழுகை சரியாக காலை 06:15 மணிக்கு நடாத்தப்படும். இறுதி நேரத்தில் வருவதனால் ஏற்படுகின்ற சிரமங்கள் நீங்கள் உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்வதே. எனவே, குறைந்தது 05:30 மணி தொடக்கம் 06.00 மணிக்குள் திடலுக்கு வருகை தர முயற்சியுங்கள். (தொழுகை பிற்படுத்தப்படமாட்டாது)
7. வீதி ஒழுங்குக்காக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர்கள் மற்றும் பொலிஸாரின் கட்டளைக்கு மதிப்பளிப்பளியுங்கள்.
8. திடலில் பெண்கள் பகுதிக்குச் சென்று செல்பி, போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கமராக்களை ஆகாயத்தில் செலுத்தி வீடியோ செய்பவர்கள் ஏற்பாட்டாளர்களிடம் முன் அனுமதி பெற்றுக் கொள்ளவேண்டும்.
9. தங்களது அழகை வெளிக்காட்டுமுகமாக ஆடை அணிந்து வருகின்ற அனைத்து பெண்களும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படுவர்.
10. நறுமணங்களைப் பூசிக் கொண்டு ஆண்களுக்கு இடையில் குறுக்கிடும் பெண்கள் குறித்து ஹதீஸ்களில் கடுமையான எச்சரிக்கைகள் உள்ளதால் பெண்கள் இது விடயத்தில் கவனமாக நடந்து கொள்ளவேண்டும்.
11. தொழுகையிலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறுகின்ற குத்பாப் பிரசங்கத்திலும் கலந்து கொண்டு பயன்பெறுவோமாக.
12. ஒரே குடும்ப அங்கத்வர்களாக இருந்தாலும் திடலில் தங்களது குடும்ப ஆண் பெண்களுக்கு இடையில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும். தங்களது வீடுகளைப்போன்று சேட்டைகளில் ஈடுபடக்கூடாது.
13. அவரவர் விருப்பம் போன்று இரண்டாம், மூன்றாம் ஜமாஅத்துக்கள் என நடத்துவதற்கு அனுமதியளிக்கப்படமாட்டாது.
14. வுளு செய்து கொண்டு தொழுகை விரிப்புக்களுடன் வருவது தொழுகையை நிறைவேற்ற உதவியாகவிருக்கும்.
15. தொழுகையின்போது ஸப்புகளில் நேராகவும், நெருக்கமாகவும் நிற்பதுதான் நபியுடைய வழிமுறை. தங்களது வசதிற்கேற்ப ஆங்காங்கே நின்று தொழுவது நபியவர்களுக்கு மாறுசெய்கின்ற செயற்பாடாகும். ஆகவே தொழுவதற்கு முன்னர் நாம் சரியாக நேராக நிற்கின்றோமா? எனது அருகில் உள்ளவர் நேராக நிற்கின்றாரா? என்பதை குறிப்பாக ஒவ்வொருவரும் கவனியுங்கள்.
16. தொழுகின்றபோது எமது பார்வைகள் மேல்நோக்கிச் செல்லாதவாறு பார்த்துக் கொள்வோமாக. தொழுகையின்போது மேலே பார்ப்பதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
17. இறுதி நேரத்தில் வருபவர்கள் கடல் ஓரங்களில் தொழுது தங்கள் ஆடைகள், மொபைல் போன் போன்றவை நனைவதையும் பாதணிகள் அலைகளால் அடித்துச் செல்லப்படுவதையும் கவனத்திற் கொள்ளுங்கள்.
18. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஏற்பாட்டுக்குழுவினால் திடலில் விடுக்கப்படுகின்ற அறிவித்தல்களுக்கு முழமையாக மதிப்பளியுங்கள்.
19. முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். அவரவர் விடுகின்ற சிறு தவறுகளை அழகிய முறையில் உரியவர்களிடம் சுட்டிக்காட்டுவதே சிறந்த பண்பாடாகும்.
பெருநாள் தொழுகையானது சடங்கல்ல. நபி (ஸல்) அவர்களின் ஸூன்னாவை நிலைநாட்டி படைத்தோனிடத்தில் அதிகப்படியான நன்மையைப் பெறுவதே இதன் நோக்கமாகும். தெழுகைக்கு வந்து வீடு செல்லும் வரை இறைகட்டளைக்கும் நபியின் போதனைக்கும் மாற்றமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என மிகவும் அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.
ஏற்பாட்டுக் குழு : இஸ்லாமிக் சென்றர் – காத்தான்குடி