அன்பினிய பெற்றோர்களே.. ஆசிரியப் பெருந்தகைகளே.. மாணவ மணிகளே..!
நாடளாவிய ரீதியில் நடைபெற்று முடிந்துள்ள இவ்வருடத்திற்கான தரம் 05
புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றி அரசாங்கத்தின்
கல்விக் கொள்கைக்கமைவாக 70 புள்ளிகளையும், அதற்கு மேற்பட்ட புள்ளிகளையும்
பெற்று சித்தியடையும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் சமூகங்களைச்
சேர்ந்த மாணவ மாணவிகளைப் பாராட்டி அவர்களுக்கான கண்கவரும் சான்றிதழ்களை
வழங்கும் பாரிய திட்டமொன்றினை இவ்வருடத்திலிருந்து நான்
ஆரம்பிக்கவுள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் உங்களின் கவனத்திற்கு
அறியத்தருகின்றேன்.
இத்திட்டத்தில் உங்களது பிள்ளைகளையும் ஃ மாணவர்களையும் இணைத்துக் கொள்ள
விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டிது:
01. மாணவரின் முழுப்பெயர்:
02. பரீட்சைச் சுட்டிலக்கம்:
03. மாணவரின் வீட்டு விலாசம்:
04. கல்வி கற்கும் பாடசாலையின் பெயர்:
05. பிரதேச செயலாளர் பிரிவு:
06. மாவட்டம்:
08. பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரும், தொலைபேசி இலக்கமும்:
இந்த 8 விடயங்களுக்கும் பதிலளித்து உங்களின் விண்ணப்பந்களை எமது
0777004774 எனும் இலக்கத் தொலைபேசிக்கு வட்ஸ்அப் ஃ மெஸஞ்சர் ஃ ளுஆளு
குறுஞ்செய்தி மூலம் அனுப்பி உங்கள் பிள்ளைக்கான தொடர் இலக்கம் ஒன்றைப்
பெற்றுக் கொள்ள வேண்டும்.
பரீட்சை முடிவுகள் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால்
உத்தியோகபூர்வமாக இணையதளத்தில் வெளியானதும் உங்கள் பிள்ளையின் ஃ மாணவரின்
பெறுபேறானது 70 புள்ளிகளை அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப்
பெற்றிருக்குமாயின் அச்சான்றிதழின் பிரதியொன்றினை குறித்த மாணவருக்கு
நாம் வழங்கியுள்ள தொடர் இலக்கத்தையும் குறிப்பிட்டு மீண்டும் எனது
வட்ஸ்அப் இலக்கத்திற்கு; அனுப்பிவைத்து இச்சான்றிதழைப் பதிவுத்தபால்
மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டத்தின் நோக்கம், இப்பரீட்சையில் 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள்
அனைவரும் சித்தியடைந்தவர்களே என்பதை தேசிய ரீதியில் உறுதிப்படுத்தி
அவர்களின் இடைநிலைக் கல்வியை ஊக்கப்படுத்துவதேயாகும்.
இப்பரீட்சைக்குத் தோற்றி மாணவர்களும், அவர்களின் பெற்றோர் ஃ
பாதுகாவலர்களும் தனித்தனியாகவும் விண்ணப்பிக்கலாம். அல்லது பாடசாலை
ரீதியாக அதிபர் வகுப்பாசிரியர் தலைமையில் ஒன்றித்தும் விண்ணப்பிக்கலாம்.
பரீட்சை முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகும் தினத்திற்கு முதல் நாள்
வரை இவ்வாறு நீங்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பின் இத்திட்டத்தில் இணைந்து
கௌ;ள முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
இவ்வண்ணம்,
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஜே.பி
ஸ்தாபகர், ‘புவி றஹ்மதுழ்ழாஹ் கல்வியாளர் இல்லம்’
இல: 43, அப்றார் பள்ளிவாசல் வீதி,
புதிய காத்தான்குடி – 06.