ஸ்மார்ட்போன் வெடித்து அதிகாரி ஹஷன் பரிதாப பலி.!

phoneகோலாலம்பூர்: மலேசிய நிதியமைச்சகத்துக்கு சொந்தமான கிராடில் பண்ட் என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரி நஸ்ரின் ஹாஷன் என்பவர் ஆவார். மேலும் அதிகாரி நஸ்ரின் ஹாஷன் ஹூவாய் மற்றும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று படுக்கையறையில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் சென்றார் நஸ்ரின் ஹாஷன், அந்த சமயம் ஸ்மார்ட்போன் திடீரென வெடித்து சிதறியது, இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டு உயிரழந்தார். மேலும் படுக்கையில் அதிகமாக தீப்பற்றி எரிந்தது.
Read the rest of this entry »

தொடரும் பிறை மோசடி

acju– AF-50

கொழும்பு: நாட்டின் சில பாகங்களில் இன்று மாலை ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டிருக்கிறது. எனினும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் 15ம் திகதி வெள்ளிக்கிழமை நோன்பைத் தொடருமாறு அறிவித்துள்ளது. ஏற்கனவே ACJU உறுப்பினர்களுக்கிடையே பிறை கருத்து முரண்பாடுகள் ரமழான் ஆரம்பத்திலிருந்து இருந்துவந்த நிலையில், இப்பிறை விவகாரத்தில் மோசடி இடம்பெற்றிருப்பதாக பிறை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் இன்று பிறை தென்பட்ட நாடுகளின் விபரங்கள்

cresent_moon[1]– MJ

பக்தாத்: இன்று 14 மாலை ஷவ்வால் பிறை பல நாடுகளில் தென்பட்டிருக்கின்றன. பஹ்ரைன் 39 நிமிடங்கள், நோர்கட் 45 நிமிடங்கள், ரபா 49 நிமிடங்கள், மொகாதிசு, கர்தூம், திரிபோலி, அல்ஜீரிஸ் ஆகிய இடங்களில் 46 நிமிடங்களும், டிபோஜிஸ் மற்றும் டியூனிஸ் 44 நிமிடங்கள், கெய்ரோ 43 நிமிடங்கள், சனா 42 நிமிடங்கள், றியாத், அம்மான், ஜெருஸலம் 42 நிமிடங்கள், பெய்ருட், டமஸ்கஸ், டோஹா, அபிதாபி, குவைட் மற்றும் மஸ்கட் ஆகிய இடங்களில் 41 நிமிடங்களும் ஷவ்வால் பிறை தெளிவாகத் தென்பட்டிருக்கின்றன.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நாளை பெருநாள்

eid moonறியாத்: சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நாளை வெள்ளிக்கிழமை (15) பெருநாள் என அந்நாடுகளின் உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கஃபாவில் மலக்கு இறங்கும் காணொளியும் புத்தி சுவாதீனமற்ற நம்மவர்களும்

12344056862072399652rofi_April_s_Fool.svg.hi[1]MJ

லண்டன்: தற்பொழுது இந்த ரமழானின் (2018) 27ம் இரவு கஃபாவில் மலக்கு ஒருவர் இறங்குவது போல் ஒரு காணொளி வட்ஸ்அப் இலும் முகநூலிலும் பரப்பப்பட்டு வருகிறது. “மாஷா அல்லாஹ்”, “அல்லாஹு அக்பர்” என்று புத்திசுவாதீனமற்ற எம்மவர்களால் வியக்கப்படுகிறது.
Read the rest of this entry »

“ஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்”

acju– வை எல் எஸ் ஹமீட்

பிறை பார்த்தல் தொடர்பாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு மீண்டும் ஒரு பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் எப்போது பெருநாள் கொண்டாட வேண்டும்; எனத்தீர்மானிப்பதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு எந்த அதிகாரமும் இருக்கமுடியாது. இலங்கையில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிவாயில்களில் அதுவும் ஒன்று, அவ்வளவுதான்.
Read the rest of this entry »