15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பதவியேற்ற 92 வயது முன்னாள் பிரதமர்- வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி

mahadir malaysiaகோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த பொது தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகதீர் மொஹமத் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார். 92 வயதாகும் அவர், 60 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த பேரீஸான் நேஷ்னல் கூட்டணியை அண்மையில் நடந்த தேர்தலில் தோற்கடித்தார். Read the rest of this entry »

“2009 மே 18 தமிழ் இன அழிப்பு நாள்” – வடமாகாண சபை பிரகடனம்

mullivaikkal-may19[1]யாழ்ப்பாணம்: முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு மே-18ஆம் தேதியை தமிழ் இன அழிப்பு நாளாக இலங்கை வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. வடமாகாண சபையின் 122ஆவது அமர்வு (10)  கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மே 18 ஆம் தேதியை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார். Read the rest of this entry »

அமைச்சர் ஹக்கீமின் உரை கவலை தருகிறது

  • வை எல் எஸ் ஹமீட்

hakeemகொழும்பு: ஜனாதிபதியின் 8ம் திகதி பாராளுமன்ற கொள்கை விளக்க உரையின் விவாதத்தில் அமைச்சர் ஹக்கீமின் உரை மிகவும் கவலை தரக்கூடியதாகவும் அரசியல் விரக்தி நிலைக்கு இட்டுச் செல்வதாகவும் இருந்தது. அவருடைய பேச்சின் பிரதான அம்சமாக “ ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஒரு நழுவல் போக்கினைக் கொண்டிருந்ததாகவும் ஒரு உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை;” என்றும் குறைபட்டுக்கொண்டார். Read the rest of this entry »

உலகம் போற்றும் முகம்மட் சலாஹ்

mohamed salahலண்டன்: லிவர்பூல் முன்னணி கால்பந்து வீரர் முகம்மட் சலாஹ், தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை எகிப்தைச் சேர்ந்த சமூக வலைத்தள பயனர்கள் பெருமையுடன் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். இந்த பெருமையைப் பெற்றுள்ள முதலாவது எகிப்தியர் இவர் என்பதும் இதற்கு முக்கிய காரணம். Read the rest of this entry »