ஷகிப், நூருல் ஹசனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

bangladesh srilanka nidhahas 2018கொழும்பு: நேற்று (16) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஆறாவது 20 ஓவர் கிரிக்கட்  போட்டியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகீப் அல் ஹசன் மற்றும் மேலதிக வீரர் நூருல் ஹசன் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த இருவருடைய போட்டிக்கான சம்பளத்தில் 25 சதவீதம் அபராதமாக அறவிடப்படவுள்ளதுடன் மறைபுள்ளியும் வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »

ரிதிதென்ன-ஜெயந்தியாய பிரதேசங்களை இணைக்கும் வகையில் 80 மில்லியன் ரூபாய் செலவில் புதிய பாலம்

hizbulla rididennaரிதிதென்ன: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான ஜெயந்தியாய மற்றும் ரிதிதென்ன ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வகையில் 80 மில்லியன் ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கும் வேலைத்திட்டம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கோறலைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். Read the rest of this entry »