இஸ்ரேலின் தாக்குதலில் 12 பலஸ்தீனர் பலி

palestineகாஸா: தங்களது ஆறு வாரகால போராட்டத்தை துவக்குவதற்காக காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான பலஸ்த்தீனர்கள் இஸ்ரேலின் எல்லையை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணியின்போது குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பலஸ்த்தீனத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூடே அதற்கு காரணமென்றும் அது குற்றஞ்சாட்டியுள்ளது. Read the rest of this entry »

எகிப்தில் இடம் பெற்ற சர்வதேச குர் ஆன் போட்டியில் ஓட்டமாவடி இஸ்ஸத் ஐந்தாம் இடம்…

  • ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

oddamavadi izzathஓட்டமாவடி: ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தினை பிறப்பிடமாக கொண்ட அல்-ஹாபிழ் எம்.ஐ.மொஹம்மட் இஸ்ஸத் அன்மையில் எகிப்து நாட்டில் இடம் பெற்ற சர்வதேச குர் ஆன் போட்டியில் ஐந்தம் இடத்தினை பெற்று ஊருக்கும், நாட்டுக்கும் பெரும் சேர்த்துள்ளார். ஐம்பந்தைந்து நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு கொண்ட குறித்த சர்வதேச குர் ஆன் போட்டியில் இஸ்ஸத் ஐந்தாம் இடத்தினை பெற்றிருப்பதானது அவருக்கு குர் ஆன் மற்றும் மார்க்க கல்வியினை வழங்கிய வாழைச்செனை அந் நஹ்ஜத்துல் இஸ்லாமிய அரபு கல்லூரிக்கும் மேலும் பெருமை சேர்க்க கூடிய விடயமாக உள்ளது. Read the rest of this entry »

புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை –2018

islahiyya madambaமாதம்பை இஸ்லாஹிய்யா கலாபீடத்துக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. மேற்படி நேர்முகப் பரீட்சை கல்லூரி வளாகத்தில் காலை 09:30 மணி முதல் நடைபெறவுள்ளது. Read the rest of this entry »

1600 பேருக்கு பட்டமளிப்பு

rathakrishnana minister– பா. திருஞானம்

கொழும்பு: மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டபடிப்பினை மேற்க் கொண்டு நிறைவு செய்த 1600 கல்வி முதுதத்துவமாணி, கல்வி முதுமணி கல்வி, முகாமைத்துவ விஞ்ஞான முதுமாணி மற்றும் கல்விமாணி பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கும் விழா தேசிய கல்வி நிறுவகத்தின் பனிப்பாளர் நாயகம் கலாநிதி திருமதி ஜே.குணசேகர தலைமையில் கொழும்பு பண்டாராநாக்க ஞாபகார்த்த சர்வேதேச மாநாட்டு மண்டபத்தில் (28) நடைபெற்றது.  Read the rest of this entry »

“என் வாழ்நாள் முழுவதும் வருந்தும் செயல்” : கண்ணீருடன் மன்னிப்பு கோரிய ஸ்மித்

smithபோர்ட் எலிசபெத்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கமரன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் தனது பங்கு குறித்து மன்னிப்பு கோரிய முன்னாள் ஆஸ்திரேலிய தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் சிந்தினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பின்னர், டேவிட் வார்னர் மற்றும் கேமரன் பேன்கிராஃப்ட் ஆகியோருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தடை விதித்தது. Read the rest of this entry »

ஏப்ரல் 3ம் திகதியும் பிரித்தானிய முஸ்லிம்களும்

  • MJ

uk muslims.jpg 1லண்டன்: “Punish a Muslim day” எனும் ஏ4 அளவில் அச்சடிக்கப்பட்ட எச்சரிக்கை ஒன்று பிரித்தானியாவில் முஸ்லிம்கள் செரிந்து வாழும் லண்டன், செப்ஃபீல்ட், பிரட்ஃபேர்ட், லெஸ்டர் மற்றும் கார்டிஃப் ஆகிய நகரங்களில் உள்ள சில வீடுகளில் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சிலரது வீட்டுக் கதவின் ஊடாக போடப்பட்டிருப்பதாகவும் தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துவருவதாக பிரித்தானிய பொலிஸார் கூறுகின்றனர்.
Read the rest of this entry »