– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

bakkirஓட்டமாவடி: ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் வரலாறு கண்டிராத வெற்றியினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொள்வதற்கு சகோதரர் பாக்கீர் ஆசிரியருடைய பங்கானாது மிக முக்கியமான ஒன்றாக காணப்பட்டது. தேர்தல் காலத்தில், தான் காத்தான்குடியில் திருமனம் முடிந்திருந்ததும் மட்டுமல்லாமல் தினமும் ஏ/எல் மாணவர்களுக்கு தனது பிரத்தியேக வக்குப்புக்களை முடித்து விட்டு மாலை 7 மணிக்கு பின்னரே ஓட்டமாவடிக்கு வருகை தருவார்.

அதற்கு பிற்பாடே கல்குடாவில் முஸ்லிம் காங்கிரசின் செயற்பாட்டாளர்களுடன் தேர்தலில் நாளுக்கு நாள் எவ்வாறான வியூகங்களை அமைத்து ஓட்டமாவடி பிரதேச சபை மட்டுமல்லாது வாழைசேனையிலும் அதிகப்படியான ஆசனங்களை பெறுவது சம்பந்தமாக தனது காய் நகர்த்தல்களை மேற்கொள்வார். இது கல்குடாவினுடைய முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும், உயர் பீட உறுப்பினருமான றியாழுக்கு பாரிய உந்து சக்தியாகவும், இலக்கினை நோக்கிய அவருடைய பயனத்தினை அடைந்து கொள்வதற்கான இலகுவான வழியாகவும் அமைந்திருந்தது.

மாவட்டத்தில் மட்டுமல்லாது முழு கிழக்கிழங்கையிலுமே பொருளியல் வல்லுணர்களை உறுவாக்குவதில் உயர்தர மாணர்களுக்கான அறிவினை சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நாடு தழுவிய பிரபல்யமான முதன்மை ஆசிரியராக செயற்பட்டு வழங்கி வருகின்ற பாக்கீர் ஆசிரியர் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு படி மேலே சென்று மட்டக்களப்பின் அரசியல் தலைவன் ஹிஸ்புல்லாவிடம் அரசியல் பயின்று கல்குடாவில் பிறந்த மகன் ஒருவன் பூர்வீக காத்தான்குடி உள்ளங்களை வென்று எவ்வாறு காத்தான்குடி நகர சபை உறுப்பினராவது என்பதனை முழு மட்டக்களப்பிற்கு மட்டுமல்லாமல் கிழக்கிலங்கை சமூகத்திற்கும் எடுத்துக்காட்டினார்.

bakkir

காய்க்கின்ற மரத்திற்குதான் கல்லடி என்பது போல சிலரால் பல நேரம் விமர்சனங்களுக்கு உள்ளாகும் சகோதரர் பாக்கீர் உண்மையில் ஆசிரியர் தொழில் மற்றும் அரசியலுக்கு அப்பால் சிறந்த பன்பாளர் மட்டுமால்லாது படித்த, பாமர மக்கள் அனைவராலும் மதிக்கப்பட கூடிய ஓர் சிறந்த மனிதராவார்.. அதனால்தான் கடந்த பிரதேச சபை தேர்தலில் அவருடைய வீயூங்களும், அவருடைய ஒட்டுமொத்த மேடை பேசுக்களும் சமூக மயப்படுத்தப்பட்டு ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியடைவதற்கு அவருடைய பங்கும் மிக முக்கிமான ஒன்றாக அமைந்திருந்தது.

கல்குடாவில் பிறந்து காத்தான்குடி நகர சபையில் உறுப்பினராக இருந்த பாக்கீர் எதிர்காலத்தில் கல்குடாவில் இருந்து மாகாண சபைக்கு செல்வதற்கு எல்லா வகையிலும் தகுதியானவர் என்பதனை இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் வெற்றியடைவதற்கு சகோதரர் பாக்கீரின் பங்களிப்பும், அவருடைய செயற்திறன்மிக்க அரசியல் காய் நகர்த்தல்களும் முக்கியமான விடயமாக பார்க்கப்படுகின்றது. இது என்னுடைய கருத்து மட்டுமல்லாமல் நடு நிலையாக சிந்திக்க கூடிய கல்குடாவின் படித்த பாமர மக்களுடைய கருத்தாகவும் இருக்கின்றது.

ஆகவே பாக்கீர் ஆசிரியரின் முதற் கட்ட அரசியல் பிரவேசமான காத்தான்குடி நகர சபை உறுப்பினர் என்பதற்கு அப்பால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட கணக்கறிஞர் றியாழ் கிட்டத்தட்ட பத்தாயிரம் வாக்குகளை பெறுவதற்கும், வரலாற்றில் பதியப்பட்ட வேண்டிய இம்முறை ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசிற்கு கிடைத்துள்ள வெற்றியினை வைத்து பாக்கீர் ஆசிரியரின் பங்களிப்புக்களை எடுத்து பார்கின்ற பொழுது கணக்கறிஞர் றியாழ் எதிர் காலத்தில் பாராளுமன்றம் நுளைவதற்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் மிக முக்கிய தேர்தலாக இருக்கின்ற மாகாண சபை தேர்தலை கல்குடாவில் வெற்றிகொள்ளவதற்கு பாக்கீர் ஆசிரியர் மிகப் பொருத்தமானவர் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். பொறுத்திருந்து பார்ப்போம் தீர்மானங்கள் எவ்வாறு நிறைவேற்ப்படுக்கின்றது என்பதனை