வாக்கெடுப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயம்

ballot_box1[1]– எம்.எஸ்.எம்.ஸாகிர்

கொழும்பு: நாளை (10) சனிக்கிழமை நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கச் செல்வோர் தமது அடையாயத்தை உறுதிப்படுத்துவதற்கு கீழ்க்காணும் அட்டைகளுள் ஒன்றை எடுத்துச் செல்லல் வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச் சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரம், அரச சேசை ஓய்வூதிய அடையாள அட்டை, பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மதகுருமார்களுக்கான அடையாள அட்டை, தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட விசேட அடையாள அட்டை. Read the rest of this entry »