மக்களை வாட்டி எடுக்கும் குளிர்: பிரித்தானியாவுக்கு சிவப்பு எச்சரிக்கை

snow– MJ

லண்டன்: பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரமாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. காலநிலை மறை (-) 5க்கும் குறைவானதாக பல இடங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக நிலவி வருகிறது. வழமையாக கால நிலை எச்சரிக்கைகளுக்கு மஞ்சல் எச்சரிக்கையே விடுக்கப்படும். ஆனால் ஸ்கொட்லாந்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. Read the rest of this entry »

முதல் நாளே சீர் குலைந்துபோன போர் நிறுத்தம்

syriaடமஸ்கஸ்: சிரியாவின் கிழக்கு கூட்டாவின் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் தினமும் ஐந்து மணிநேரம், தாக்குதலை நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆணையிட்டு இருந்தார். இந்த போர் நிறுத்தம் செவ்வாய்கிழமை தொடங்கும் என்றும், மேலும், பொதுமக்கள் வெளியேறுவதற்கான “மனிதாபிமான பாதைகள்” உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. Read the rest of this entry »

காத்தான்குடி தபால் நிலைய அதிபர் மஸாஹிர் காரியப்பர் சம்மாந்துறை தபால் நிலைய அதிபராக இடமாற்றம்

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

mazahir kariyapparகாத்தான்குடி: காத்தான்குடி தபால் நிலையத்தில் பிரதேச தபால் அதிபராக கடமையாற்றி சம்மாந்துறை பிரதேச தபால் நிலைய அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் தபால் அதிபர் கே.எம். மஸாஹிர் காரியப்பருக்கான பிரியாவிடை நிகழ்வு 26 நேற்று திங்கட்கிழமை பிற்பகல் காத்தான்குடி தபால் நிலையத்தில் இடம்பெற்றது. Read the rest of this entry »

“வாக்குவாதம் நடந்து முடிந்து சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு வாகனங்களில் வந்தவர்களே பள்ளிவாயல் தாக்குதலை நடாத்தினார்கள்”

ampara masjidஅம்பாறை: அம்பாறை நகரில் ஒரு குழுவினரால் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளும் ஒரு பள்ளிவாசலும் தாக்கபட்டதை அடுத்து அங்கு ஒரு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.  அப்பகுதி முஸ்லிம்கள் வழங்கிய தகவலின்படி கடந்த இரவு அங்கிருக்கும் முஸ்லிம்களின் உணவு விடுதி ஒன்றுக்கு வந்த சிங்கள மொழியில் பேசிய சிலர், உணவு அருந்திவிட்டு, உணவில் இருந்த கோதுமை மாவின் அவியாத சில பகுதிகளை காண்பித்து “கடைக்காரர்கள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தை கலந்திருப்பதாக” கூறி குற்றஞ்சாட்டியுள்னர். Read the rest of this entry »

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம்

hisbullah_mp_200_200[1]அம்பாறை நகரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையொன்றை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார். Read the rest of this entry »

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு தொடர்ந்தும் ஹிஸ்புல்லாஹ் வசம்

hizbullahபுனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கீழ் உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சுப் பதவிகளில் செய்யப்பட்ட மாற்றத்தின் போதும் குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவி எவ்வித மாற்றங்களுமின்றி தொடர்ந்தும் அவர் வசமே உள்ளது.

எனினும், குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவி அஜித் பீ. பெரேராவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ள போதிலும் அதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை.
Read the rest of this entry »