“அரசை விட்டு வெளியேறுகின்ற எந்த நோக்கமும் கிடையாது”- ஹிஸ்புல்லாஹ்

hizbullahகொழும்பு: “இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து விட்டு நான் அரசிலிருந்து வெளியேறவுள்ளதாக சில இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் கிடையாது. அவ்வாறு அரசை விட்டு வெளியேறுகின்ற தேவையோ – நோக்கமோ எனக்கு இல்லை.” என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திட்டவட்டமாக தெரிவித்தார். Read the rest of this entry »

அறிக்கை வெளியீடுகள் ஒருபோதும் சமூகத்தைத் திருத்தாது

  • AK- 49

kattankudy main roadகாத்தான்குடி: அண்மைக்காலமாக காத்தான்குடியில் ஏற்பட்டிருக்கும் கலாசார சீரழிவுகளைத் தடுக்கும் முகமாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்னளின் சம்மேளனம் அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தது. இவ்வாறான அறிக்கை வெளியீடுகள் ஒருபோதும் சமூகத்தைத் சீர்திருத்தப்போவதில்லை!
Read the rest of this entry »

ரோஹிஞ்சா முஸ்லிம்களை மீண்டும் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் வகையில் மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம்

rohingyaநேப்பிடா: வன்முறைத் தாக்குதல்கள் காரணமாக மியான்மரிலிருந்து வெளியேறி வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை மீண்டும் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் வகையில் மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், ஒப்பந்தம் குறித்த வேறெந்த தகவலும் வெளியிடப்படவில்லை. Read the rest of this entry »

97 ஓட்டங்கள் களத்தில் நின்றபோது டிக்ளேர் செய்ய முயன்ற கோஹ்லி

-kohli-shastri-twitterகொல்கத்தா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தான் செஞ்சுரி அடிக்கும் முன்பே டிக்ளேர் கேட்டு இருக்கிறார். இதற்காக அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் அனுமதி கேட்டு உள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் கோஹ்லி சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தார். இது அவரது 50 வது ஐசிசி செஞ்சுரி ஆகும். மிகவும் த்ரில்லாக சென்ற இந்த போட்டி டிராவில் முடிந்தது. Read the rest of this entry »

தப்பிச் சென்ற இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

armyகொழும்பு: விடுமுறை பெறாது, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலம்  இன்று (22) நிறைவடைகின்றது. அதன் அடிப்படையில், சட்ட ரீதியாக இராணுவ சேவையிலிருந்து விடுபடுவதற்கான கால எல்லை நாளையுடன் (22) நிறைவடைகின்றது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய, பாதுகாப்பு அமைச்சினால் கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை இப்பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தது. Read the rest of this entry »

17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்கு உலக அழகிப்பட்டம்

indiaசன்யா சிடி: இந்தியாவைச் சேர்ந்த 20 வயதாகும் மானுஷி சில்லர், 2017-ஆம் ஆண்டிற்கான ‘மிஸ் வோர்ல்ட்’ எனப்படும் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வெல்வது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு, 2000ஆம் ஆண்டில், பிரியங்கா சோப்ரா இந்த பட்டத்தை வென்றார்.
Read the rest of this entry »