“#FiftyDaysSinceTheSiege”: கத்தார்வாசிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

qatarடோஹா: சில வளைகுடா நாடுகள் கத்தார் மீது தடை விதித்து 50 நாட்கள் முடிவடைந்துவிட்டது. கத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டிய சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள், அதனுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக கடந்த ஜூன் ஐந்தாம் தேதியன்று அறிவித்தன. Read the rest of this entry »

ஐக்கிய இராச்சியத்தில் முதன்முதலாக மருத்துவப்பட்டம் பெற்ற காத்தான்குடியைச் சேர்ந்த சப்ரான் சத்தார்

  • நமது நிருபர்

ZATTAR.jpg3லண்டன்: ஐக்கிய இராச்சியத்தில் ரெடிங் (Reading) நகரில் வசித்துவரும் சப்ரான் சத்தார், பிரசித்திபெற்ற சவ்த்தம்ப்டன் பல்கலைக்கழகத்தில் (University of Southampton) 6 வருட வைத்தியக் கற்கை நெறியைப் பூர்த்திசெய்து, வைத்தியராக பட்டம் பெற்றார். “அல்ஹம்துலில்லாஹ்”! இப்பட்டமளிப்பு விழா 21-07-2017 வெள்ளிக்கிழமை சவ்த்தம்ப்டன் பல்கலைக்கழக வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
Read the rest of this entry »

முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். மன்சூர் காலமானார்

  • எம்.எஸ்.எம்.ஸாகிர்

IMG_7237முன்னாள் அமைச்சர் அப்துல் ரஸ்ஸாக் மன்சூர் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(25) செவ்வாய்க்கிழமை சற்றுமுன்னர் காலமானார்.

வணிக மற்றும் கப்பல்துறை முன்னாள் அமைச்சரான அவர், குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதவராகவும் பணிபுரிந்துள்ளார். Read the rest of this entry »

காத்தான்குடியில் உடற்பயிற்சி நடைபாதை அமைப்பதற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதியொதுக்கீடு!

  • ஹாசிப் யாஸீன்

hareesகாத்தான்குடி: விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் காத்தான்குடியில் உடற் பயிற்சி நடைபாதை அமைப்பதற்கு ரூபா 30 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்நிதி ஒதுக்கீடு நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீனின் வேண்டுகோளின் பேரில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read the rest of this entry »