ரஜப் மாதத்தின் தலைப்பிறை பற்றி தீர்மானிக்கும் நாள் இன்று

  • எம்.எஸ்.எம். ஸாகிர்

crescent moon[1]கொழும்பு: ஹிஜ்ரி 1438 புனித ரஜப் மாதத்தின் தலைப்பிறை பற்றி தீர்மானிக்கும் நாள் 29 ஆம் திகதி புதன்கிழமை மாலை வியாழன் இரவாகும். எனவே மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 06.21 மணி முதல் புனித ரஜப் மாதத்தின் தலைப்பிறையைப் பார்க்குமாறும், பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் நேரில் அல்லது கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களில் ஏதாவது ஒன்றின் மூலம் அறியத்தருமாறும் சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக் கொள்கிறது.

மேற்படி புனித ரஜப் மாதத்தின் தலைபிறையைத் தீர்மானிப்பதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் 29 புதன் மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ள மாநாட்டில், கொழும்பு பெரியபள்ளிவாசல், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிறைக்குழுக்களின் உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

எனவே, தயவுசெய்து இத்தகவலை  29ஆம் திகதி மஃரிப் தொழுகையின் பின்னர் ஜமாஅத்தாருக்கு அறிவிக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சகல பள்ளிவாசல் நிர்வாகிகளையும் தயவுடன் கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டிக் கொள்கிறது.

தொலைபேசி இலக்கங்கள் – 011 – 2451245, 011 – 2432110, 077 – 7316415,

பெக்ஸ் – 011- – 2390783

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s