Day: December 28, 2016
-
சமூக மட்ட வாகன விபத்துக்களை குறைக்க விஷேட செயற்திட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் பிரிவிலும் 2016-ஜனவரி மாதம் தொடக்கம் 2016 டிசம்பர் மாதம் இன்று வரை பாரிய வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 எனவும் பாரிய காயங்கள் மற்றும் அங்கவீனம் ஏற்படுத்திய வீதி விபத்துக்கள் 300ற்கும் அதிகம் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் ஜே.பி.கே.ஜெயவீர தெரிவித்தார்.
-
வினைத்திறன் கண்காட்சி-காத்தான்குடியில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கிவரும் மட்டக்களப்பு பாலர் பாடசாலை கல்விப் பணியகம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ஊடாக நடைமுறைப்படுத்தும் 2016 வினைத்திறன் கண்காட்சி 28-12-2016 இன்று புதன்கிழமை காத்தான்குடி அந்-நாஸர் வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
பண்டிகைக்காலப் பரிசுப் பொருட்கள் பெறுவதை தவிர்க்க உத்தரவு
கொழும்பு: பண்டிகை காலத்தில் அரசு அதிகாரிகள் அன்பளிப்பு பொருட்கள் பெறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு ஒன்றை, அந்த அணைக்குழு, பொது நிர்வாக அமைச்சகத்தின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது.
-
சபரகமுவ ஆசிரியர் இடமாற்றங்களில் மீண்டும் அரசியல் தலையீடு
– பா.திருஞானம் 2017ஆம் ஆண்டுக்கான சபரகமுவ மாகாண ஆசிரியர் இடமாற்றங்களில் மீண்டும் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன. நியாயமான காரணங்களை முன்வைத்து இடமாற்றத்தை கோரியவர்களின் இடமாற்றங்கள் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு மக்கள் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார். சபரகமுவ மாகாண ஆசிரியர் இடமாற்றல் சபைகளில் இடம்பெற்று வரும் அரசியல் தலையீடு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
-
அதி விமர்சையாக இடம்பெற்ற காத்தான்குடி நலன்புரி ஐக்கிய இராச்சிய அமைப்பின் ஒன்றுகூடல்
லண்டன்: காத்தான்குடி நலன்புரி ஐக்கிய இராச்சிய ஒன்றியத்தின் 3வது மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு 27-12-2016 லண்டன், Tooting நகர் ஜெஸ்மின் மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது. பகல் 1 மணியிலிருந்து பகல் போசணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு இராப்போசணத்துடன் இரவு 11 மணியளவில் நிறைவடைந்தது.