அநாமோதய துண்டுப்பிரசுரங்கள் வெளியாகும் நேரம்: மக்கள் அவதானம்

notice– ஏ. சுபைர்

காத்தான்குடி: தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. பெரும்பாலான மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்று ஏற்கனவே தீர்மானித்துவிட்டனர். ஆனால் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி, தனது ஆதரவுகைள கொஞ்சமாவது அதிகரித்துக்கொள்வதற்கு அரசியல்வாதிகள் பேராசை கொள்வர்.
Read the rest of this entry »

காத்தான்குடியில் இடம்பெற்ற இறுதித் தேர்தல் மேடைத் துளிகள்…

  • இனியவன்

nfgg slmc காத்தான்குடி: நேற்றிரவு 14-08-2015 நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வருகின்றன. இந்தவகையில், காத்தான்குடியில் இரு துருவங்களாக இப்பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி மற்றம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் + நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைந்த இறுதித் தேர்தல் பிரச்சார மேடைகள் வழமைபோன்று முழங்கின.
Read the rest of this entry »

சியாட், நஸார் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அப்துர் ரஹ்மானுக்கு ஆதரவு

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

shiyadகாத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் மற்றும் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நஸார் (அல்பா நஸார்) உட்பட அதன் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் 2ம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரும், நல்லாட்சிக்கான Read the rest of this entry »

பதில் செயலாளர்களாக துமிந்த திஸாநாயக்க, விஸ்வ வர்ணபால நியமனம்

dumintha-vishwa varnapala

கொழும்பு: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பதில் செயலாளராக பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுசில் மற்றும் அநுரவை நீதிமன்றம் பதவி நீக்கியது

susil_anura[1]கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாபா ஆகியோரை அவர்களது செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. அக்கட்சிகளின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கமையவும் கட்சியின் யாப்பிற்கமைய இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கும்முகமாக பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படல் வேண்டும் – தேர்தல்கள் திணைக்களம் பணிப்பு

  • எம்.ஐ.அப்துல் நஸார்

election (3)கொழும்பு: நிறுவனத் தலைவர்கள் தமது பணியாளர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கும்முகமாக விடுமுறை வழங்க வேண்டுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் திணைக்களம் மற்றும் தொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணக்கப்பாட்டிற்கு அமைவாக 40 கிலோமீற்றருக்கு உட்பட்ட தூரப் பிரதேசத்தினுள் பயணிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு அரை நாள் விடுமுறையும், 40 கிலோமீற்றருக்கும் 100 கிலோமீற்றருக்கும் இடைப்பட்ட தூரப் பிரதேசத்தினுள் பயணிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு முழு நாள் விடுமுறையும், Read the rest of this entry »