இஸ்லாத்தின் பெயரிலான வன்முறைகள்

afghan– அஷ்ஷெய்க்  எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)

சம­கால உலகில் சில குழுக்கள் தமக்கு இஸ்­லா­மியப் பெயர்­களை சூட்டிக் கொண்டு வன்­மு­றை­களில் ஈடு­பட்டு வரு­வது உலகம் அறிந்த உண்­மை­யாகும். மெய்­சி­லிர்க்க வைக்கும் சித்­தி­ர­வ­தைகள், தற்­கொலைத் தாக்­கு­தல்கள் போன்­றன இக்­கு­ழுக்­களால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இவற்றை மீடி­யாக்­களில் பார்ப்­ப­வர்கள் இஸ்­லாத்தைப் பற்­றியும் முஸ்­லிம்­க­ளைப்­ பற்­றியும் தப்­பான அபிப்­பி­ரா­யங்­களை ஏற்­ப­டுத்திக் கொள்­வதை தவிர்க்க முடி­யாதுள்ளது. எனவே, இத்­த­கைய குழுக்­க­ளது நட­வ­டிக்­கை­களைப் பற்­றிய சரி­யான புரிதல் எல்­லோ­ருக்கும் அவ­சி­யப்­ப­டு­கி­றது. பின்­வரும் குறிப்­புக்­களை மேற்­படி விவ­காரம் தொடர்­பாக முன்­வைக்க முடியும்.

இஸ்­லாத்தின் அங்­கீ­கா­ர­மின்மை

 மேற்­படி குழுக்­களால் மேற்­கொள்­ளப்­படும் அக்­கி­ர­மங்­க­ளுக்கும் அத்­து­மீ­றல்­க­ளுக்கும் வன்­மு­றை­க­ளுக்கும் இஸ்­லாத்தின் அங்­கீ­காரம் முற்­றாகக் கிடை­யாது. இஸ்­லாத்தை உரிய முறையில் பின்­பற்றும் ஒருவர் சமூக மாற்­றத்­துக்­கான வழி­மு­றை­யாக பலாத்­கா­ரத்­தையோ வன்­மு­றை­க­ளையோ கையாள முடி­யாது (“மார்க்­கத்தில் பலாத்­கா­ர­மில்லை” (2: 256) “மனி­தர்கள் விசு­வா­சி­க­ளாக மாறு­வ­தற்கு நீர் அவர்­களை  நிர்ப்­பந்­திக்­கி­றீரா?” (10:99) “நீர் அவர்­களின் மீது ஆதிக்கம் செலுத்­து­ப­வ­ராக இல்லை”(88:22) போன்ற வச­னங்கள் பலாத்­கா­ரத்தைக்  கண்­டிக்­கின்­றன.

இஸ்­லாம் என்ற மார்க்கத்தோடு வாழ்­பவர் அத்துமீறல்களோடும் வன்­மு­றை­களோடும் சம்பந்தப்படமாட்டார். இஸ்லாம் என்றால் ‘சாந்தி, ‘சமா­தானம்’ (ஸில்ம்) என்­ற பொருளைத் தருகிறது. என­வேதான் அல்லாஹ் “நீங்கள் ‘ஸில்­ம்’ க்குள் முழு­மை­யாக நுழைந்து விடுங்கள்” (2:208) என்­கிறான். முஸ்லிம் என்­பவன் அன்பு, இரக்கம், சாந்தி, சமா­தானம், மென்மை, தர்மம் என்­ப­வற்றை உலக மாந்தர்களுக்கு அக்­க­றை­யோடு சுமந்து வரும் ஒரு தூதுவன் தான்.

எனவே, பிறரை அவன் சந்­திக்­கின்ற பொழு­து­கூட “உங்கள் மீது சாந்தி உண்­டா­கட்டும்” (அஸ்­ஸ­லாமு அலைக்கும்) என்ற வாழ்த்தைக் கூறுவான். இஸ்­லா­மிய பிரச்­சாரம் கூட ‘ஹிக்மா’ (ஞானம்-16:125) ‘பஸீரா’ (அறி­வுத்­தெ­ளிவு-12:108) ‘ஜிதால் பில் அஹ்ஸன்’ (மிக­வுமே அழ­கிய விதத்­தி­லான கருத்துப் பரி­மாறல்-16:125) ‘கவ்லுன் லய்யின்’ (மிரு­து­வான பேச்சு-20:44) என்­ப­வற்றின் மூலமே இடம்­பெற வேண்­டு­மென்று அல்­குர்­ஆ­னிலே அல்லாஹ் சொல்­கிறான்.

ஆனால்,உலகில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் சமூக நீதி­யையும் கட்­டிக்­காப்­ப­தற்கு, கொலைத் தண்­ட­னையை இஸ்லாம் அமு­லாக்­கி­னாலும் அதற்கு  இறுக்­க­மான கட்­டுப்­பா­டு­க­ளையும் நிபந்­த­னை­க­ளையும் போட்­டி­ருக்­கி­றது. கொலைக் குற்­றத்தில் சம்­பந்­தப்­பட்­டவன்  தண்­ட­னை­யி­லி­ருந்து  விலக்­க­ளிக்­கப்­ப­டு­வ­தற்கும் மன்­னிக்­கப்­ப­டு­வ­தற்கும் ஏரா­ள­மான வாய்ப்­பு­க­ளையும் தூண்­டு­தல்­க­ளையும்  அது வழங்­கு­கின்­றது. அது மட்­டு­மன்றி, குற்­றத்தை நிறு­வு­வ­தற்கு பல­மான ஆதா­ரங்­க­ளையும் சாட்­சி­யங்­க­ளையும் உறு­தி­யாக வேண்­டு­கி­றது. “அவர்­களை நீர் மன்­னித்­து, தாராளத் தன்­மை­யோடு நடந்து கொள்­வீ­ராக” (5:13) என அல்லாஹ் கூறுகிறான்.பழிக்கு பழி வாங்­கு­வ­தற்கான உரிமையை பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது அவரது உறவினர்களுக்கோ அவன் வழங்­குகிறான்.ஆனால், அதேவேளை மன்­னிகும்படியும்  ஊக்­கு­விகிறான்.பழிக்குப்பழி வாங்கும் போது அத்­து­மீ­றப்­பட்ட அள­வுக்கே அத்துமீறியவரைத் தண்­டிக்கலாம் என்றும்­ அளவு மீறி தண்­டிப்­பது கடும் தண்­ட­னையை பெற்­றுத்­த­ரு­மென்றும் அவன் கூறு­கின்றான். இது பற்றி சூரா பக­ராவின் 178 ஆம் வசனம் மிகத் தெளி­வாக விப­ரிக்­கி­றது.

இஸ்­லா­மிய  பிரச்­சா­ரத்துக்கு முட்டுக்கட்டை போட்டு அதற்கு அச்சுறுத்தலாக அமைவது, முஸ்லிம்  சமூ­கத்தை ஒழித்துக் கட்­டு­வ­தற்காக முழுமூச்சாக செயல்படுவது, பல­வீ­னர்கள்  மீது  அரா­ஜ­கத்தை கட்­ட­விழ்த்து  விடு­வது போன்றவற்றில் ஈடுபடுபவர்களை தடுத்து நிறுத்த இஸ்லாம்  ஆயுதப்  போராட்­டத்தை  ஒரு வழி­மு­றை­யாக அங்­கீ­க­ரிக்­கி­றது. மட்­டு­மன்றி ,அதனை  கட்­டா­யப்­ப­டுத்­து­கி­றது. ஆனால், இதற்கும் இறுக்­க­மான கட்­டுப்­பா­டு­களையே போட்­டி­ருக்­கி­றது.

ஒருவர்  மற்­றொ­ரு­வரை  எவ்­வித  நியா­யமும் இன்றி  கொலை செய்­வ­தா­னது முழு மனித சமு­தா­யத்­தையும் கொலை செய்­வ­தற்கு சம­னாகும் என்றும் அதேவேளை எவ­ரா­வது ஒரு­வரை இறப்­பி­லி­ருந்து பாது­காப்­பது முழு மனித சமு­தா­யத்­தையும் இறப்­பி­லி­ருந்து பாது­காப்­ப­தற்கு சமன் என்ற கருத்தை குர்­ஆனில் (5:32) அல்லாஹ் தெரி­விப்­ப­தி­லி­ருந்து ஒரு மனிதன் – அவன் எந்த மதத்தைச் சேர்ந்­த­வ­னாக இருந்­தாலும்- அவ­னது உயிரை பாது­காப்­பதன் அவ­சி­யத்தை உணர்த்­து­கி­றான். “(இஸ்லாமிய அரசுடன்) உடன்படிக்கை செய்துள்ள (முஸ்லிம் அல்லாத நாட்ட)வரைக் கொலை செய்பவன் மறுமையில் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டான்” (ஆதாரம்-புகாரி)என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும் அவர்கள் “இஸ்லாமிய அரசின் பாதுகாப்பிலுள்ள முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு  யாராவது அநியாயம் செய்தால் அல்லது அவரது உரிமை ஒன்றை குறைத்து விட்டால் அல்லது அவரது சக்திக்கு மேல் அவரை நிர்பந்தித்தால் அல்லது அவரது விருப்பமின்றி அவரிடமிருந்து ஏதாவது ஒன்றை எடுத்தால்  மறுமையில் நான் அவருக்கெதிராக வாதாடுவேன்” (ஆதாரம்-அபூதாவுத்,பைஹகி) என்றும் கூறினார்கள். 

மனித உயிர்­களின் மீது அத்­து­மீ­று­வது எப்­படிப் போனாலும் மிரு­கங்­க­ளது உயிர்கள் மீதும் உடல்கள் மீதும் அத்துமீறு­வது கூட ஒரு விசு­வா­சியை நரகில் நுழை­விக்கும் குற்­ற­மாகும். ஒருப் பெண்  பூனையொன்றைக்  கட்டி வைத்து உணவு கொடுக்­கா­மைக்­காக நரகம் நுழைந்தாள் என்றும், தாகித்­தி­ருந்த நாய்க்கு  நீர் ­பு­கட்­டிய  நடத்தை கெட்ட ஒரு பெண் மன்­னிக்­கப்­பட்­டாள் என்றும் கூறும் நபி­மொ­ழிகள் இஸ்­லாத்தின் ஜீவ­கா­ரூன்ய கோட்­பாட்டை உயர்ந்த குரலில் ஒலிக்கச் செய்­கின்­றன.

இஸ்­லாத்தின் மேற்­படி  மனி­த­நேய, சமா­தான, சௌஜன்ய  கோட்­பா­டு­க­ளோடு ஒப்­பி­டு­கையில் இஸ்­லாத்தின் பெயரால் அண்மைக் காலத்தில் சில கும்­பல்கள் மேற்­கொண்டு வரும் சில நட­வ­டிக்­கைகள் அவர்­க­ளுக்கும் இஸ்­லா­திற்கும் தொடர்­பில்லை என்­பதையே காட்­டு­கின்­றன. அவர்கள் இஸ்­லாத்தின் பெய­ருக்குக் களங்கம் கற்­பிப்­ப­தோடு இஸ்லாத்தை மிகச் ­ச­ரி­யாகப் பின்­பற்றும் முஸ்­லிம்­க­ளது வட்­டத்­தி­லி­ருந்து அவர்கள் வெளி­யே­றி­விட்­ட­மையை   பிர­க­ட­னப்­ப­டுத்­து­கி­றது.

இஸ்­லா­மிய யுத்த தர்மம்

ஏலவே நாம் குறிப்­பிட்­டது போல் இஸ்லாம் ஆயுதப் போரை பல நியா­ய­மான கார­ணங்­க­ளுக்­காக அங்­கீ­க­ரித்­தாலும் யுத்­தத்தின் போது முஸ்லிம் போர் வீரர்கள் கடைப்­பி­டிக்க வேண்­டிய அழ­கிய ஒழுங்­கு­களை அது வகுத்துத் தந்­தி­ருக்­கி­றது. எதி­ரிகள் போரைத் தூண்டும் நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யி­ருப்­பது ஊர்­ஜி­த­மாக வேண்டும், தனிப்­பட்ட குரோ­தங்கள், இன­வாதம், பிர­தே­ச­வாதம், மொழி­வாதம் என்­பன போருக்குப் பின்­புலமாக அமை­ய­லா­காது, யுத்­தத்தின் போது பெண்கள் வயோதிபர்கள், சிறு­வர்கள் , மத­போ­த­கர்கள்,  போராட்ட களத்­திற்கு வராத, போரை விரும்­பா­த­வர்கள் போன்றோர் கொல்­லப்­ப­டக் கூடாது, பழம் தரும் மரங்கள் வெட்­டப்­ப­டலாகாது என்­பன அவற்றிற் சிலவாகும். இஸ்­லா­மிய வர­லாற்றில் கைதிகள் மிகவும் மரி­யா­தை­யா­கவே நடாத்­தப்­பட்­டுள்­ளனர். இவ்வழ­கிய பண்­பாட்டை அவ­தா­னித்த பலர் தாமாக முன்­வந்து இஸ்­லாத்தை தழு­விய சந்­தர்ப்­பங்கள் அதி­க­மாகும்.

afghanistan (2)

கைதி­களை  சித்­திர­வதை செய்ய வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் தெளி­வா­கவே கூறி­யி­ருக்­கின்­றார்கள் “போராடுங்கள்.அளவு கடந்து நடந்து கொள்ளாதீர்கள்.துரோகம் செய்யாதீர்கள்.சித்தரவதை செய்யாதீர்கள் .சிறுவர்களைக் கொல்லாதீர்கள்.”(ஸஹிஹ் முஸ்லிம் 3261)என்றார்கள். கைபர் யுத்த சந்தர்ர்ப்பத்தில் யூதர்களின் வேத­மான தௌராத்தின் பிர­தி­யொன்று கண்­டெ­டுக்­கப்­பட்ட போது அதனை பத்­தி­ர­மாகக் கொண்டு போய் யூதர்­க­ளிடம் ஒப்­ப­டைக்கும் அவர்கள் தமது தோழர்­களைப் பணித்­தார்கள். இதி­லி­ருந்து பிற சமு­தா­யத்­தவரது உயிர், உடமை, மதம் ஆகி­ய­வற்­றினை யுத்த சந்­தர்­ப்பத்தில் கூட நபிகளார் பாது­காத்­தமை புல­னா­கி­றது.தற்­கால சூழலில் சில தீவி­ர­வாதக் குழுக்கள் இஸ்­லாத்தின் பெயர் தாங்­கிய நிலையில் செய்யும் வன்­செ­யல்­களை இந்த நிலைக்­க­ளனில் நின்று தான் நாம் மதிப்­பீடு செய்ய வேண்டும்.

மேற்குலக ஊடகங்களின் பக்கசார்பு

அதேவேளை, இஸ்லாமிய உலகில் இடம்பெறும் சின்ன்னச் சின்ன குற்றச்செயல்ளையும் பூதக்கண்ணாடி போட்டு பார்ப்பதையும் இல்லாதவற்றை உள்ளதாக சித்தரிப்பதையும் ஊடகக் கொள்ள்கையாகக் கடைப்பிடிக்கும் மேற்குலக சார்பு ஊடகங்கள் இஸ்லாமிய உலக விவகாரங்களை திரிபுபடுத்துவதிலும் தப்பான கருத்துக்களை உருவாக்குவதிலும் வரிந்துகட்டிக் கொண்டு செயல்படுகின்றன. இஸ்லாமிய உலகில் வன்முறைகள் இடம்பெறுவதில்லை என்பது இதன் அர்த்தமல்ல.

ஆனால்,மேற்குலகில் இடம்பெறும் சமுகவிரோத செயல்கள் மூடிமறைக்கப்படுகின்றன. முதலாம் உலக யுத்தத்தின் போது ஒரு கோடி எழுபது லட்சம் பேரும் இரண்டாம் உலக யுத்த்தத்தின் போது ஆறு கோடிப் பேரும் கொல்லப்பட்டார்கள். அங்கவீனமானவர்கள்,ஏற்பட்ட பொருட்சேதங்கள் தனியானவவை.  மேற்குலகு புரிந்த இந்த அட்டூழியங்களை வார்த்தைகளில் வடிக்க முடியாது.குவண்டனாமா, இராக் சிறைகளில் முஸ்லிம் கைதிகள் மீது அமெரிக்க இராணுவம் புரிந்த,புரியும் அடாவடித்தனங்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால் கூட வன்மையாகக் கண்டிக்கப்பட்டுவருகின்றன. பலஸ்தீனர்களை இஸ்ரேல் நடாத்தும் விதத்தை மேற்குலக ஊடகங்கள் மிகக் குறைவாகவே கண்டுகொள்கின்றன,அல்லது அவற்றை நியாயம் காணுகின்றன.எனவே,இஸ்லாமிய பெயர் தாங்கிய தீவிரவாதிகள் புரியும் குற்றசெயல்களை கண்டிக்கும் அதே வேகத்தில் இந்த ஊடகங்கள் மேற்குலக பயங்கரவாதத்தையும் கண்டிக்குமாயின் அதனை வரவேற்க முடியும்.மொத்தத்தில் இஸ்லாமிய உலக பயங்கரவாதம் பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் அவற்றுக்கில்லை.   

isis

அரா­ஜக ஆட்­சி­யா­ளர்கள்

அதே­வேளை, இஸ்­லா­மிய உல­கி­ல் நடு­நிலை தவ­றிய தீவி­ர­வாதக் குழுக்கள் உரு­வா­கு­வ­தற்கு பல நியா­ய­மான கார­ணங்­களும் இருப்­பதை எம்மால் மறுக்க முடி­யாது. மேற்­கத்­தய நாடு­க­ளது அடி­வ­ரு­டி­க­ளாக இருந்த வண்ணம் குடிமக்­க­ளது அடிப்­படை மனித உரி­மை­களைக் கூட வழங்­காமல் அரா­ஜக ஆட்­சி­களைக் கொண்டு நடாத்தும் அரபுலக ஆட்­சி­யா­ளர்கள் இத்­த­கைய தீவி­ர­வாதக் குழுக்­க­ளது உரு­வாக்­கத்­திற்கு பல வகை­யிலும் கார­ண­மாக அமைந்­தி­ருக்­கி­றார்கள். எனவே, இந்த அடக்­கு­முறைகளது எதிர் விளை­வாக இத்­த­கைய குழுக்கள் தோன்­று­கின்­றன. ஒரு பந்தை சுவரில் வேக­மாக வீசி எறியும் போது அது அதே வேகத்தில் எறிபவ­ரது திசையை நோக்­கியே திரும்­பி­வ­ரு­வது பௌதீக நிய­தி­யாகும். அதுபோலவே அர­பு­லக ‘அரச பயங்­க­ர­வாதம்’ பொது மக்­களில் பல­ருக்கு வேப்­பங்­கா­யாகக் கசத்து, அது வன்­மு­றை­களின் பால் அவர்­களிற் சிலரை இட்­டுச்­செல்­கி­றது. நாம் இவ்­வாறு கூறும் போது பயங்­க­ர­வா­தத்தை நியா­யப்­ப­டுத்­து­வ­தாக எவரும் கருதி விடக்­கூ­டாது. பொறுமையானது கடு­மை­யாக சோதிக்­கப்­ப­டும்­போது அது தீப்­பி­ழம்­பாக வெடித்துச் சித­றி­விடும்.

அர­பு­லகில் உள்ள ஆட்­சி­யா­ளர்­களிற்  பலரை மேற்­கத்­தய நாடுகள் தமது கைப்­பொம்­மை­க­ளா­க வைத்து இயக்கிக் கொண்­டி­ருக்­கின்­றன. அரபுலகில் உள்ள பெற்றோல் உள்­ளிட்ட இயற்கை வளங்கள் மீது பூரண ஆதிக்கம் செலுத்த வேண்­டு­மாயின்  எதற்கும் இசைந்து கொடுக்கும் ஆட்­சி­யா­ளர்­களை அதற்­காகப் போஷித்து வளர்ப்­பதும் அவர்­க­ளது ஆட்­சி­களை தக்­க­வைக்க தன்­னா­லான சக­ல­தையும் செய்­வதும் மேற்கின் நலன்­களின் தேவை­யாக மாறி­யுள்­ளது.

அரபு நாட்டு ஆட்­சி­யா­ளர்­களும் தமது இராணுவ மற்றும் பண பலத்தின் உத­வி­யுடன்  குடி­மக்­க­ளது இரத்­தங்­களை உறிஞ்சிக் குடிக்கும் ஒட்­டுண்­ணி­க­ளாக இருக்­கின்­றனர். அதேவேளை, உல­கெங்கும் பர­வ­லாக ஏற்­பட்டு வரும் இஸ்­லா­மிய எழுச்­சி­களால் தமது ஆட்சிக் கதி­ரைகள் பறி­போய்­விடும் என்ற பயத்தால் தத்­த­மது நாடு­களில் இஸ்­லா­மி­ய­வா­திகள் தலை­தூக்கும் போதெல்லாம் அவர்­க­ளுக்கு மரண அடி­கொ­டுத்து சுய­பா­து­காப்­புக்கு வேலி­போட்டுக் கொள்­கி­றார்கள்.

மேற்­கு­லக கப­டத்­தனம்

 மேற்­கு­லக நாடு­க­ளுக்கும் இத்­த­கைய ஆட்­சி­யா­ளர்­களே தேவைப்­ப­டு­கி­றார்கள். எனவே, முஸ்­லிம்­க­ளுக்கு  தத்­த­மது நாடு­களில் இஸ்­லா­மிய நட­வ­டிக்­கை­க­ளுக்கு அவ­காசம் இல்­லாமல் போகின்ற போது, அடிக்­கடி சிறை­களில் பலர் தள்­ளப்­படும் போது, சர்­வ­சா­தா­ர­ண­மா­கவே மரண தண்­ட­னைகள் அரங்­கேற்­றப்­ப­டும்­ போது உள்ளம் வெதும்பும் முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயு­தத்­தினை கையி­லெ­டுத்து போராட –முனைகிறார்கள்.

விசித்­திரம் என்ன­வென்றால் தமக்கு வேண்­டிய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு ஆயுதம் விநி­யோ­கிக்கும் மேற்­கு­லகு தான் அந்த ஆட்­சி­யா­ளர்­களை எதிர்த்துப் போராடும் ஆயுதக் குழுக்­க­ளுக்கும் ஆயுத விற்­பனை செய்­கின்­றன. ஒரு காலத்தில் சதாம் ஹுஸைனைப் பலப்­ப­டுத்த ஆயுதம் கொடுத்த அமெ­ரிக்கா தான் ஆப்­கானில் கம்யூனிஸ சார்பு ஆட்­சியை வீழ்த்தி ரஷ்­யாவை துரத்த உயிர்­களைத் தியாகம் செய்து போரா­டிய முஜா­ஹித்­க­ளுக்கும் பூர­ண­மான ஒத்­து­ழைப்பைக் கொடுத்தது. ரஷ்யா துரத்­தப்­பட்­ட­ பின்னர் முஜா­ஹித்கள் ஆட்­சி­ய­மைத்த மறு­க­ணமே அவர்கள் ஆட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­படவும்  ஏற்­பா­டு­களைச் செய்­தது.

அந்­த­வ­கையில் அரபுலக ஆட்­சி­யா­ளர்கள் மட்­டு­மன்றி அப்­பி­ராந்­தி­யங்­களில் போராடும் பல தீவி­ர­வாத குழுக்­களும் கூட மேற்­கி­லி­ருந்து ஆயுதம் பெறு­வது விநோதத்திலும் விநோ­த­மாகும்.

INDIA ISIS

ஒரு காலத்தில்  இலங்கையின் அரச படை­க­ளுக்கு இஸ்ரேல் ஆயுதப் பயிற்சி வழங்­கிய அதே­வேளை வடக்கில் போரா­டிய தமிழ் ஆயுதக் குழுக்­க­ளுக்கும் யுத்­தப்­ப­யிற்சி வழங்­கி­யது என்றால் இந்த நாட­கத்தின் பின் புலத்தை புரி­வது கஷ்­ட­மல்ல.

சுருங்கக் கூறின் மேற்­கு­ல­குக்குத் தேவைப்­பட்­டது மூன்று விட­யங்கள் மாத்­திரமே.

1. உலகில் வேகமாக ஏற்பட்டு வரும் நடு­நி­லை­யான இஸ்­லா­மிய எழுச்­சியை முற்று முழு­தாகத் தடுத்து நிறுத்­து­வது.  

2. அரபு உலகின் பெற்­றோ­லிய வளத்தை பூரண கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­பது.      

3. மேற்­கு­லகில் இருக்கும் ஆயுத உற்­பத்திச் சாலை­க­ளுக்கு தொடர்ந்­தேர்ச்­சி­யான ஆயுதச் சந்­தை­களை தக்க வைத்துக் கொள்­வது.

மேற்­படி மூன்று நோக்­கங்­க­ளையும் அடைந்து கொள்­வ­தற்­காக உலகில் எந்­தப்­பா­த­கத்­தையும் செய்­வ­தற்கு மேற்­கு­லகு தயங்­கப்­போ­வ­தில்லை. இந்த உண்­மையை அர­பு­லக ஆட்­சி­யா­ளர்­களும்  தீவி­ர­வாத- பயங்­க­ர­வாத ஆயு­தக்­கு­ழுக்­களும் புரியும் காலம் முதலில் பிறக்க வேண்டும். அது­மட்­டு­மன்றி தம்மைத் தூண்­டுவோர் யார்? அவர்­க­ளது உள்­நோக்கம் என்ன? தாம் சார்ந்­தி­ருக்கும் இஸ்­லாத்தின் மிகச் சரி­யான போத­னைகள் யாவை? தாம் போராடும் வழி­மு­றைகள் சரி­யா­ன­வையா? போன்ற தெளி­வுகள் அனைவருக்கும் அவ­சியம் தேவைப்­ப­டு­கின்­றன.

மித­வாதம் தேவை

தற்­கால உலகில் நடு­நி­லையில் நின்று இஸ்­லாத்தைப் பேசும், எழுதும், நடை­மு­றைப்­ப­டுத்தும் மித­வாத இஸ்­லா­மிய அறி­ஞர்கள் இத்­த­கைய அரபு நாட்டு ஆட்சியாளர்கள் பற்­றியும் அவர்கள் விடும் பிழை­களை எதிர்ப்­ப­தற்கும் அவற்றைக் களை­வ­தற்கும் சிபார்சு செய்யும் விதந்­து­ரைகள் பற்­றியும் எமக்கு அதி­க­மான தெளிவு தேவைப்­ப­டு­கி­றது. ‘கடும் முறுக்கு தெறிக்கும்’ என்­பது போல் தீவி­ர­வாதம் ஒரு போதும் நீடித்து நிலைத்த நற்­ப­லன்­களைத் தரப்­போ­வ­தில்லை. ஆயு­தத்தால் ஆட்­களை மடக்கி பெறப்­படும் வெற்­றி­க­ளுக்கு ஆயுள் குறைவு. மனதில் புகுந்து, ஆத்மா­வைத்­ தொட்டு, அறி­வு­பூர்­வ­மாகச் செய்­யப்­படும் பிர­சார உத்­திகள் மாத்திரமே நீடித்து நிலைக்கும். நாய் எம்மைக் கடிக்­கி­றது என்­ப­தற்­காக நாமும் நாயைக் கடிக்க முடி­யாது. ‘முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்’ என்ற முது­மொழி எல்லா இடங்­க­ளுக்கும் பொருந்­தாது. அடிப்­ப­டையில் இஸ்லாம் ஆயுதப் போரில் தங்கியிருக்கவில்லை. ‘இதற்கு மேல் சகிப்பதில் அர்த்தமில்லை’ என்ற கட்டத்தை அடையும் பட்சத்தில் மட்டுமே அது மிகுந்த கட்டுப்பாடுகளோடு ஆயுதத்தை பிரயோகிக்க அனுமதிக்கிறது.

Isis militants have blown up the Mosque of the Prophet Younis, or Jonah, in Mosul

இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் கூட பல கட்டங்களைக் கடந்த பின்னரே அமுலாக்கப்படுகின்றன. அவற்றிற் சில வருமாறு:-

1. மனப்பக்குவம் உருவாக்கப்பட்டிருப்பது

2. குற்றங்கள் நிகழாமல் இருப்பதற்கான சூழல் இருப்பது

3. தீமைகளுக்கான வாயில்கள் உயர்ந்தபட்சம் மூடப்பட்டிருப்பது

4.இஸ்லாத்தினை கொள்கையாக ஏற்று அமுல் நடாத்தும் இஸ்லாமிய அரச   இயந்திரம் இருப்பது       

5.முன்மாதிரியான கலீபா இருப்பது  

இதுபோன்ற பல நிபந்தனைகள் இருந்தால் தான் குற்றவியல் தண்டனைகளைக் கூட அமுலாக்க முடியும். அப்படியில்லாமல்  நினைத்த மாத்திரத்தில் தண்டனைகளை அமுலாக்கப் போனால் மார்க்கத்தில் மனோ இச்சைக்கு இடமளித்த குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும்.அத்துடன் இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயம் தான் உலக மக்களுக்கு ஏற்படும்.

எனவே, இஸ்­லாத்­துக்குள் தீவி­ர­வா­தத்தை நுழைத்து வன்­மு­றை­களில் ஈடு­ப­டுவோர் இந்­நி­லை­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கு இஸ்­லா­மிய உல­கி­லுள்ள மித­வாத அணு­கு­மு­றை­களில் சம்­பந்­தப்­ப­டு­வ­தோடு நடுநிலையான இஸ்­லா­மிய அறி­ஞர்­க­ளது புத்­தி­ம­தி­க­ளையும் அறி­வு­ரை­க­ளையும் கடைப்­பி­டிக்க வேண்டும். இல்­லா­த­போது அது இஸ்­லாத்­துக்கு அவப்­பெ­யரை தேடித்­த­ரு­வ­தோடு முஸ்லிம் சமூகத்தையும் பேராபத்துக்கு உள்ளாக்கும். இலங்கையிலுள்ள முஸ்லிம் விரோத சக்திகளது போக்குகளிலும் அது எண்ணை ஊற்றுவதாக அமையும். அல்லாஹ் எம் அனைவருக்கும் அவனது மார்க்கத்தை உரியமுறையில் புரிந்து அமுலாக்கும் மனப்பக்குவத்தையும் வாய்ப்பையும் தருவானாக!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s