“சிறுபான்மை சமூகத்தின் மத உரிமைகள் மறுதலிக்கப்பட்டதனால் தான் இலங்கையில் ஆட்சி மாற்றங்களை அந்த சமூகத்தினர் ஏற்படுத்த முனைந்தனர்”

rishad– இர்ஷாட் ரஹ்மதுல்லா

புத்தளம்: சிறுபான்மை சமூகத்தின் மத உரிமைகள் மறுதலிக்கப்பட்டதனால் தான் இலங்கையில் ஆட்சி மாற்றங்களை அந்த சமூகத்தினர் ஏற்படுத்த முனைந்தனர் என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தமது வாழ்வை அலங்கரிக்கும் எந்தெவொரு அரசியல்வாதிகளும் இறைவனிடத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

புத்தளம் உலுக்காப்பள்ளம் பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற பாதை அபிவிருத்தி பணிகளின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதித0யாக கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் நவ்பீல் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் பேசுகையில் கூறியதாவது –

வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் இங்கும் வாழ்கின்றனர்.அவர்கள் இந்த பிரதேசத்தில் வாழ்கின்ற போது அவர்களுக்கான தேவைப்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டியிருக்கின்றது.அந்த வகையில் அண்மையில் என்னை வந்து சந்தித்த இப்பிரதேச மக்களிடம் நான் வழங்கிய வாக்குறுதிகளில் முக்கியமானது இந்த பிரதேசத்தின் பாதைகளை நவீன மயப்படுத்திதருவேன் என்று,அதனை தேர்தலொன்றுக்கு முன்னர் செய்வாகவும் கூறினேன்.இன்று அதனை நிறைவு செய்துள்ளேன்.

சுமர் 6 ½ கிலோ மீட்டர் பாதைகள் இன்று புனரமைக்கப்பட இருக்கின்றது.இதற்கென 130 மில்லியன் ரூபாய்களை பெற்றுக் கொடுத்துள்ளேன்.இது போன்று இன்னும் எத்தனையோ அபிவிருத்திகளை நாம் செய்துள்ளோம்.ஆனால் சிலர் வெறும் வாக்குறுதிகளை மற்றும் வழங்குவார்கள்.அதனை அவர்களால் காப்பாற்ற முடியாது,இவ்வாறானவர்கள் இன்று என்னெகிராக பல பொய் பரப்புரைகளை செய்துவருகின்றனர்.

பெரியமடு கிராமம் என்பது பழமை வாய்ந்த கிராமம்,அங்கு நாம் மக்களது மீள்குடியேற்றத்தை செய்கின்ற போது அதனை புனித பூமி என்று கூறி அந்த மீள்குடியேற்றத்தை தடுக்கின்றனர்.இந்த மக்கள் தமது பயணங்களை இலகுவாக மேற்கொள்ள வேண்டும் என பரப்புங்கடந்தான் பெரியமவுக்கான பாதை ஒன்றினை ஏற்படுத்தி கொடுத்துள்ளேன்.ஆனால் அதனை முஸ்லிம்கள் மரம் கடத்துவதற்கு பயன்படுத்தும் பாதை என பொய்யான கட்டுக் கதைகளை அவிழ்த்துவிடுவதுடன்,அதனை ஊடகங்கள் மூலமாகவும் நாட்டுக்கு காட்டுகின்றனர்.இதனது பின்னணியில் இருக்கும் எதிரிகளின் பட்டியலில் இருப்பவர்கள் யாரென்று மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

கடந்த அரசாங்கத்தில் நாம் பலமிக்க அமைச்சை கொண்டிருந்தோம்.வடக்கு மக்களுக்கு தேவயான அபிவிருத்திகளை இனம் கடந்து பணியாற்றினோம்.ஆயிரம் நியமனங்களை வழங்கினோம்.இருந்த போதும் எமது சமூகத்திற்கு அந்த அரசாங்கத்தினால் அச்சுறுத்தல் ஏற்பட்டது.இதில் முதன்மை படுத்தியவிடயம் எமது சமூகத்தின் பாதுகாப்பினையே என்பதை இங்கு கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் எதற்காக இந்த கட்சியினை உருவாக்கினார் என்பதை மறக்க முடியாது,ஆனால் துரிதிஷ்டம் அந்த கட்சியின் செயற்பாடுகளில் உடன்பாடுகள் காணமுடியாது என்பதனால் நாம் அவர் விட்டுச் சென்றதை இந்த சமூகத்திற்கு பெற்றுக் கொடுக்கவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உருவாக்கப்பட்டுள்ளது.இன்று வடக்கிற்கு வெளியே கிழக்கிலும் ஏனைய மாகாணங்களிலும் எமது கட்சியின் செயற்பாடுகளால் கவரப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் அணிதிரளுகின்றனர்.

இதன் மூலம் இன்னும் இன்னும் நாம் இந்த மக்களின் தேவைப்பாடுகளை ஆழமாக பார்க்க வேண்டியுள்ளது.

கல்வித் துறையில் எமது சமூகத்தின் நிலை மிகவும் கவலையளிக்கின்றது.இது தொடர்பில் நாம் நடவடிக்கையெடுக்கவுள்ளோம்.இதற்கான பரந்துபட்ட பல ஏற்பாடுகளை செய்துவருகின்றோம்.அது மட்டுமல்லாமல் எமது கலாச்சார மரபுகளை பாதுகாக்கும் விடய்ஙகளிலும் நாம் ஆர்வம் செலுத்திவருகின்றோம்.

இந்த நாட்டில அரசிலுக்கு வரும் கட்சிகள் இவை தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை,இது ஏன் என்று எமக்கு புரியவில்லை.ஆனால் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இதனை செய்கின்றது.இவ்வாறான நல்ல திட்டங்களை நாம் செய்கின்ற போது அதனை பொறுத்துக்கொள்ளமுடியாத இனவாத சக்திகளும்,எம்மை வீழ்த்த வேண்டும் அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என்று துடிக்கின்ற சிலரும் சேர்ந்துள்ளனர்.

இந்த றிசாத் பதியுதீன் அரசியலில் தோற்கடிக்கப்படுவது சாதாரண விடயமாகும்.ஆனால் இந்த சமூகம் தோற்றுபோய்விடக் கூடாது,குறிப்பாக அரசியல் வியாபாரிகளின் கைகளுக்கு மக்கள் பதவி என்னும் அமானிதம் செல்லமெனில்,இந்த நாட்டில் வாழும் 20 இலட்ச முஸ்லிம்களின் எதிர்காலம் மிகவும் அச்சம் கொண்டவையாக மாறிவிடும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
இந்த நிகழ்வில் முசலி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தேமான்ய யஹியான்,மாந்தை பிரதேச சபை உறுப்பினர் எம்.சனுாஸ்,மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s