உள்ளுராட்சி சபை: 4819 வட்டாரங்கள், 5081 உறுப்பினர்கள்

urban (2)கொழும்பு: உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை பொதுநிர்வாக அமைச்சர் கரு ஜயசூரியவிடம் நேற்று கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு அமைய நாடு முழுவதிலும் உள்ளூராட்சி சபைகளுக்கு 4819 வட்டாரங்கள் பிரிக்கப்பட்டிருப்பதுடன், 5081 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

சனத்தொகையை அடிப்படையாகக் கொண்டு எல்லை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், சில வட்டாரங்கள் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டதாகவும், சில வட்டாரங்கள் 3 உறுப்பினர்களைக் கொண்டதாகவும் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக எல்லை நிர்ணயம் தொடர்பான தேசிய குழுவின் தலைவர் ஜயலத் ரவி திசாநாயக்க குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையை அக்குழுவின் தலைவர் ரவி திசாநாயக்க, பொதுநிர்வாக அமைச்சர் கரு ஜயசூரியவிடம் கையளித்தார். இந்த நிகழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த அறிக்கைக்கு அமைய 4573 ஒற்றை அங்கத்தவர் வட்டாரங்களும், 241 இரட்டை அங்கத்தவர் வட்டாரங்களும், 9 மூன்று வட்டாரங்களும் நிர்ணயிக் கப்பட்டுள்ளன. மொத்தமாக உள்ள 4819 வட்டாரங்களிலிருந்து தொகுதிகளிலிருந்து உள்ளூராட்சி சபைகளுக்கு 5081 உறுப் பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

இதுவரை உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டாரங்கள் 4486 ஆகும். இந்த எண்ணிக்கை 5081ஆக அதிகரித்துள்ளது. புதிய அறிக்கைக்கு அமைய உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டாரங்களின் எண் ணிக்கை 595 ஆக அதிகரித்துள்ளது.

இந்த அறிக்கையை விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடம் கையளிக்கவிருப்பதாகவும், அதன் பின்னர் வர்த்தமானி மூலம் வெளி யிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித் தார். வர்த்தமானி அறிவித்தல் வெளியான தும் எவருக்காவது ஆட்சேபனை இருந் தால் அவர்களின் நிலைப்பாட்டை முன்வைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s