– பழுலுல்லாஹ் பர்ஹான், எம்.எச்.எம். அன்வர்
காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் ஐம்பெரும் எழுச்சி விழா 15-05-2015 நேற்று சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இம் ஐம்பெரும் எழுச்சி விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ மற்றும் விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி
ஆணையாளர் சட்டத்தரணி கே.சித்திரவேல் ,காத்தான்குடி நகர சபை செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர்,பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத்,காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்;பினர்களான எம்.எச்.எம்.பாக்கீர்,எம்.எம்.ஏ.லெத்தீப்,ஹாஜியானி சல்மா அமீர் ஹம்ஸா ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,கல்வியலாளர்கள் ,நகர சபை உத்தியோகத்தர்கள் உட்பட அதன் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு துறைகளிலும் சேவையாற்றிய கல்வியலாளர்கள்,உலமாக்கள்,ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள், எஸ்.எம்.எஸ்.குறுஞ்செய்தியாளர்கள்,கலைஞர்கள் ஆகியோர் அதிதிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ,எழுச்சிக் கதிர் பாகம் -02 எனும் நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இங்கு காத்தான்குடி நகர சபை பொது நூலக கணினி மயமாக்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதில் காத்தான்குடி நகர சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி விழாவில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.