ஸியாத் பஹ்மி
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே
சில அண்டங் காக்கைகளுக்கும்
குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே
1962களில் பலே பாண்டியா படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்.ஏன் இதை எழுதுகின்றேன் என்றால் தற்போதைய நாடாளுமன்ற நிகழ்வைப் பாற்கும் போது வேதனை தருகின்றது. நாடாளுமன்ற முடக்கமானது நிறைவேற்று துறைக்கும், சட்டவாக்க துறைக்குமான அதிகார இழுபறியினதும், பலங்குன்றிய ஆளும் கட்சியினதும் வெளிப்பாடாகும்.
கடந்த சனாதிபதி தேர்தலில், வாக்களிப்பிற்கு மக்களிடம் வைத்த கோரிக்கை நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் ஆக்குவதுதான். அதற்கான வரைபுகள் வந்த நேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அழைத்திருப்பதை காரணம் காட்டி நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முழு நாளும் தங்கியிருந்து, இன்றும் அமர்வை குழப்பியிருந்தனர்.
முடிவாக மஹிந்தவின் இல்லம் சென்று விசாரனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வேதனை என்ன வென்றால் சட்டத்தின் முன் யாவரும் சமன் எனும் நீதி விசாரனை சித்தாந்தங்கள் சீரழிவடைகின்றன.
வேடிக்கை, முன்னாள் ஐ.தே.க.செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்கா விற்கு சிலநாள் அமைச்சு சுகம் வழங்கியதுதான். இந்த ஊழல் குற்றச்சாட்டு, நாட்டில் அக்கால பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல் இதுதான் போலும்.
நாடாளுமன்ற மானது சட்டவாக்க சபை என்பதுடன், நாகரிகம், பண்பாட்டையும் பேணும் அவையாகவும் ஜனநாயக மரபுகளின் ஊற்றுக்கண் ஆகும். இது ஒருபுறமிருக்க பாராளுமன்றத்தில் உரையாற்றும் நாகரீகம் மிக உயர்வாகப் பார்க்கப்பட வேண்டியது.
இங்கிலாந்தில் பிரபுக்களின் அவையை பண்பாடுகளின் பொக்கிசமாக அந்த நாட்டு மக்கள் பார்கின்றனர். உலகில் சூரிய அஸ்தமனம் இல்லா சாம்ராஜ்யத்தை நிருவகித்து, ஜனநாயக மரபுகளை கற்பித்த நாட்டில் வெறும் மகா பட்டயம் எனும் ஒப்பந்தமூடே ஜனநாயகம் எனும் மக்களாட்சி மலர்ந்தது. இன்னும் சட்டத்தை மதிக்கிறார்கள் என்றால், அதில் சட்டமியற்றும் சபையோரின் வாக்கும் நடத்தையும் ஓரளவில் முக்கியமானதே.அரசியல் வாதிகள் ஊழல் பெரிச்சாளிகள், நம்பிக்கையீனமானவர்கள், கறைபடிந்த கரத்தையுடயவர்கள் எனும் பொதுப் புத்தி அண்மைய காலத்தில் சினிமா போன்ற ஊடகங்களால் விதிக்கப்பட்டது ஏதோ உண்மைதான். இன்று 21/4/2015 பாராளுமன்றில் முன்னாள் பிரதமர் தி்.மு. ஜயரட்ண அவர்கள் கூறியிருப்பதானது, பொதுப்புத்தியையும் பிரதி பலிக்கிறது. விசனத்தையும் காட்டுகிறது.
‘மஹிந்த அவர்கள் மட்டுமல்ல இங்கு இருக்கும் அரசியல். வாதிகள் அனைவரும் கள்வர்கள், கொலை காரர்கள், கொள்ளைக் காரர்கள், என அடையாளப் படுத்த படுகின்றனர். இந்நாட்டில் வரலாறு படிக்கும் சிறுவர் கள் என்ன நினைப்பார்கள்? அரசியல் வாதிகளுக்கும் பிள்ளைகள் உண்டு, பிரதமருக்கு பிள்ளைகள் இல்லை தானே?’
இது சாதாரண மூன்றாம் தரப் பேர்வளியின் பேச்சல்ல மாறாக இலங்கையின் அரசியலில் நீண்டகாலமருந்து, பிரதமர் நாற்காலி யிலும் இருந்த பழுத்த அரசியல் வாதியின் கூற்று. எவ்வாறான ஜனநாயக மரபில் வாழ்கின்றோம்? பிரதமரோ அல்லது வேறு யாருமாக இருக்கட்டும் பாராளுமன்றத்தில் ஒரு தனி மனதனின். இயற்கை குறைகளை குத்திக்காட்டுவது எவ்வகை சனநாயகம்.?பதிலாக பிரதமர் சொல்லியுள்ள பதிலில் எனக்கு பிள்ளைகள் இல்லை நான் போதைப் பொருள் கடத்தவுமிம்லை, இதுவும் இலேசான பதில் அல்ல ஒன்றில் பிள்ளைகள் உள்ள முன்னாள் பிரதமரா? கடத்தலில் ஈடுபட்டார் என்பது எம்போல் மக்களுக்கு இலகுவாக எழும் வினா? இப் பத்தியின் நோக்கம் இதுதான் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்த்தைப்பிரயோகங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை கேவலப்படுத்தும் அவையாக மக்கள் சபை மாறக்கூடாது.
மற்றயது முன்னாள் பிரதமரின் செயலாளர் போதைப் பொருள் அடங்கிய கொள்கலனை சுங்க பிரிவின் களஞ்சிய சாலையிலிருந்து விடுவிக்க பிரதமர் அலுவலக கடித தலைப்பையும் பாவித்தார் எனும் குற்றச்சாட்டு சில காலங்கள் முன் ஊடகங்களில் வந்ததும் குறிப்பிட்ட தக்கதாகும். இதனையா இன்னாள் பிரதமர் அன்னாள் பிரதமருக்கு பதிலளித்தார்?
முடிவாக ஏதோ ஓர் தேர்தல் மேடையில் முன்னாள் அமைச்சர் பசீர் சேஹுதாவூத் அவர்கள் குறிப்பிட்ட ஒரு தத்துவம் நினைவு வருகிறது ‘ஜனநாயகம் ஒரு தும்புத்தடி அது அள்ளி வந்தவைகள் அனேகம் குப்பைகள்தான்.