கல்குடா: இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் அதிகளவான முஸ்லிம் மக்கள் செரித்து வாழும் தொகுதியாகும் இங்கு அன்மைகாலமாக ஷீஆக்களின் ஊடுருவல் அதிவேகமாக பரவி வருகின்றது. என்பதனை அவதானிக்க முடிகின்றது.
இதனை தடுத்து தூய்ய இஸ்லாத்தினை கூட்டல் குறைத்தல் இன்றி மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில் கல்குடா தொகுதியின் அனைத்து தஃவா அமைப்புக்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடா கிளை கீழ் ஒன்றினைத்து தஃவா நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் ஷீஆக்கள் பற்றிய விழிப்புட்டல்களை மக்களுக்கு வழங்கி வருகின்றன.
ஷீஆக்கள் தொடர்பாக கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா எனும் இஸ்லாமிய பிரச்சார அமைப்பு வெளீட்ட துண்டு பிரசுரத்தின் தொகுப்பு இது
ஷீஆ எனும் விச வைரஸ் ஊடுருவல்!
கல்குடா முஸ்லிம் சமூகத்திற்கு ஓர் எச்சரிக்கை!! இலங்கையில் ஷீஆயிஸம். 1979ம் ஆண்டு வரை இலங்கை முஸ்லிம்கள் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் அடிப்படையிலேயே இஸ்லாத்தைப் பின்பற்றி வந்தனர். அதன் தூய வழியில் செல்வதில் சில நெளிவு சுழிவுகள் அவர்களிடமிருந்த போதும், அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் சிந்தனையில் மிகவும் உறுதியாக இருந்தனர்.
அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஷீஆயிஸம் உலகின் பல பாகங்களில் வேரூன்றி தூய இஸ்லாமிய சிந்தனைகளிலிருந்து மக்களைத் தூரப்படுத்தி வந்த போதும், அதன் தாக்கம் இலங்கையில் பேசப்படுமளவிற்கு இருக்கவில்லை. 1979ம் ஆண்டு ஈரான் குமைனியப் புரட்சி வெற்றியின் பின்னரே ஷீஆயிஸத்தின் தாக்கம் இலங்கையில் மெல்ல மெல்லப் படர ஆரம்பித்தது.
இந்த வகையில், ஈரானியப் புரட்சியின் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளச் சென்ற எமது பகுதியைச் சேர்ந்த ஒருவரே ஷீஆ விசக் கிருமியை இந்நாட்டுக்கு காவி வந்தார். அந்த வகையில் ஷீஆ விச வைரஸை இலங்கைக்கு அறிமுகம் செய்த பெருமை எம்மைச் சாருகின்றது.
ஷீஆவும் ‘தகிய்யா’ எனும் வேசமும்
இப்பிரதேசத்தில் ஷீஆ விதை ஆங்காங்கு தூவப்பட்ட போது, இப்பிரதேச உலமாக்கள் சிலர் இக்கொடூரக் கொள்கையின் நச்சுத்தன்மையறிந்து எச்சரித்து வந்தனர். ஆயினும், இவர்கள் சமூகத்தின் நாடித்துடிப்பை நன்கறிந்து மக்களிடம் வேரூன்றியிருந்த ஷிர்க்கான, பித்அத்தான செயற்பாடுகளில் ஊடுருவி அவற்றை ஊக்குவித்து தீனின் காவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள விளைந்தனர். ‘தகிய்யா’ எனும் நயவஞ்சக நடிப்புக் கொள்கைக்குள் தம்மை மறைத்து தமது கொள்கைகளைப் பகிரங்கமாக விதைக்காமல் தமக்கு நெருக்கமானவர்கள், விசுவாசிகள், தமது தயவில் வாழ்வோர் என்போருக்கு மிகவும் இரகசியமாக ஊட்டி வந்தனர். விடயம் வெளிச்சத்திற்கு வந்த போது, தமது ‘தகிய்யா’ போர்வைக்குள் மறைந்து சத்தியம் செய்து தம் மீது அபாண்டமாகச் சொல்கிறார்கள் எனப்புலம்பினர். இவர்களின் வேடத்தைப் புரிந்து கொள்ளாத ஊர்த்தலைவர்களும், பிரமுகர்களும், புத்தி ஜீவிகளும் இவர்களைக் கண்டு கொள்ளாது விட்டதோடு, சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது, தமது சுயநலங்களுக்காக அவர்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்டனர்.
தங்களது சுய நலன்களுக்காகவும், வயிற்றுப் பிழைப்பிற்காகவும் இக்கொடிய வைரஸின் பரவலுக்கு ஒத்தாசை புரிந்த, இன்று வரை ஒத்தாசை புரிந்து வருகின்ற ஆலிம்கள், புத்திஜீவிகள், ஊர்த்தலைவர்கள் என்றும் இப்பிரதேச மக்களின் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்வார்களாக! இந்த வழிகேட்டின் வளர்ச்சிக்கு ஒத்தழைப்பு வழங்கி, இப்பிரதேச மக்களின் அகீதாவைக் கெடுத்த இவர்களின் துரோகம் சந்ததி சந்ததியாய் தொடராமல் இருப்பதற்கான முயற்சிகளை இவர்கள் துரிதமாகச் செய்ய வேண்டும்.
‘தகிய்யா’ வேசம் கலைத்த ஷீஆக்கள்
ஷீஆ மத்ரஸாவின் தொடக்கத்தில் ஆரம்பமான இந்த வழிகேடு இன்று பல நிறுவனங்களோடும், நூற்றுக்கும் அதிகமான ஷிஆ விச வைரஸைத் தாங்கிய ஆலிம்களோடும் பல குடும்பங்களுக்குள் நுழைந்துள்ளது.
அன்று ‘தகிய்யா’வின் அடிப்படையில் நடித்துக் கொண்டு தமது கொள்கையை மூடி மறைத்து வந்த இவர்கள், இன்று ‘தகிய்யா’ எனும் வேசம் கலைந்து வெளிப்படையாகவே தமது நச்சுக் கருத்துக்களைப் பரப்ப முயன்று வருகின்றனர். தமது நிகழ்வுகளிலும், உரைகளிலும், எழுத்துக்களிலும், இணையத்தளங்களிலும், சமூக வலைமனைகளிலும் தமது வழிகெட்ட கொள்கைகளைத் தாரளாமாகப் பகிரங்கப்படுத்தி வருகின்றனர். இப்போது தான் நமது மக்கள் பலர் விழித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
நாம் கால் நூற்றாண்டுகளாகவே இவர்களை அடையாளப்படுத்தி வருகின்றோம். தம்மை அடையாளப்படுத்துவோரை வஹ்ஹாபிய பூச்சாண்டி காட்டி வசை பாடுவது ஷீஆக்களின் மூலதனமாகும். இதனையே அன்றும் செய்தனர், இன்றும் செய்து வருகின்றனர். ஆயினும், இவர்களது கபடத்தனம் இனி எடுபடப் போவதில்லை. ஏனெனில், மக்களிடம் மார்க்க அறிவின் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இவர்களின் வழிகேடுகளை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டனர்.
நபித் தோழர்களை தூசிக்கும் வழிகேடு.
இஸ்லாத்தின் பரம எதிரிகளான யூதர்களின் பின்புலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த வழிகேடர்கள் தூய இஸ்லாமியக் கொள்கையிலிருந்து இஸ்லாமிய உம்மத்தைத் தூரப்படுத்தும் சதிகாரக் கும்பல்களின் இரும்புப் பிடிக்குள் வீழ்ந்து விட்டனர். அல்குர்ஆனிலிருந்தும் தூய சுன்னாவிலிருந்தும் எம்மைத் தூரப்படுத்த ‘அஹ்லுல் பைத்துக்கள் மீதான நேசம் எனும் சுலோகத்தைத் தூக்கிப்பிடித்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்களாகிய ‘அஹ்லுல் பைத்து’க்களை நேசிப்பதாகக் கூறிக்கொண்டு உத்த சஹபாக்களை நாக்கூசாமல் தூசிக்கத் தொடங்கியுள்ளனர். நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின் பத்திற்குட்பட்ட சஹாபாக்களைத் தவிர மற்ற அனைவரும் மதம் மாறி விட்டதாக எழுதியும், பேசியும் வருகிறார்கள். சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் செய்யப்பட்ட சஹபாக்களையும், முஃமீன்களின் அன்னையர்களாகிய நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களையும் மிகவும் ஏளனமாகப் பேசி, அவர்கள் விடயத்தில் வீணான சந்தேகங்களையும் பரப்புகின்றனர். அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக அல் குர்ஆனில் கூறப்பட்ட இந்த உன்னத மனிதர்களை நரகவாதிகள். பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், இஸ்லாத்தின் எதிரிகள் எனக்கொஞ்சம் கூட இறையச்சமின்றி பிரசாரம் செய்கிறார்கள். இந்த வழிகேடர்கள்.
இது மட்டுமல்ல. அஹ்லுஸ் ஸூன்னாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வழிகெட்ட, மேலும் பல கொள்கைகளைக் கொண்டிருக்கும் இவர்கள் விடயத்தில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.