காங்கேயனோடை: காங்கேயனோடை பிரதேசத்தில் இயங்கிவரும் மீஸான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் 2வது இரத்ததான முகாம் 21-03-2015 இன்று சனிக்கிழமை காங்கேயனோடை அல்-அக்ஷா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மீஸான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தவிசாளர் எம்.எம்.எம்.நலீம் தலைமையில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் காத்தான்குடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், புத்திஜீவிகள், இளைஞர் யுவதிகள், ஊர் பிரமுகர்கள், மீஸான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் செயலாளர் ஏ.எஸ்.ஸமீம் அதன் நிருவாகத் தலைவர் ஏ.பீ.எம்.புர்ஹான் உட்பட அதன் நிருவாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் விவேக்கினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.
குறித்த மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் மீஸான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் 2வது இரத்ததான முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.