மட்டக்களப்பு: நாட்டுக்காக உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் 151 வது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. மாவட்டத்தின் பிரதான நிகழ்வு 21-03-2015 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் வாகிஷ்ட கலந்து கொண்டு இலங்கை பொலிஸ் படையின் கொடியை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் வாகிஷ்ட, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் ஜெயசிங்க, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களான அனுருத்த பண்டார ஹக்மன, பீ.எம்.எம்.தசநாயக்க, பீ.ரீ.சிசிர உட்பட நாட்டுக்காக உயிர் நீத்த தமிழ், முஸ்லிம், சிங்கள, கிறிஸ்தவ பொலிஸ் வீரர்களின் குடும்பத்தினர் ஆகியோரினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் வன் செயல்களினால் நாட்டுக்காக பாடுபட்டு உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்காக பொலிஸ் மரியாதையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்திலிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இமதகுருமார்கள் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாட்டுக்காக பாடுபட்டு உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.