காத்தான்குடி: ‘அறிவார்ந்த ஆற்றல்களால் ஆளுமைகள் வளர்த்தெடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் NFGGயின் மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின நிகழ்வுகள் நேற்று மாலை (20.03.2015) மஞ்சந்தொடுவாயில் இடம்பெற்றது.
NFGGயின் மகளிர் அணி உறுப்பினரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மகளிர் சூறாசபை உறுப்பினருமான திருமதி சல்மா ஜவாஹிர் ஆசிரியை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமதி பௌமியா சரீப், திருமதி நிஹாரா லாபிர் மற்றும் பரீதா முஸ்தபா ஆகியோர் உள்ளிட்ட மகளிர் சூறாசபை உறுப்பினர்கள், மகளிர் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பெண்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மகளிர்களினால் கவிதை, பாடல் என கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் ‘பெண்களின் மேம்பாட்டிற்கு அதிகம் பங்களிப்புச் செய்வது அறிவியல் ரீதியான அபிவிருத்தியா? பௌதீக ரீதியான அபிவிருத்தியா’ என்ற தலைப்பில் பட்டிமன்றமும், ‘சாதிக்கப் பிறந்தவர்கள்’ நாடகமும் விஷேட நிகழ்வுகளாக இடம்பெற்றன.
நிகழ்வில் மகளிர்களின் உரைகள் இடம்பெற்றதுடன், NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் நளீமி அவர்கள் விஷேட உரை ஒன்றினை நிகழ்த்தினார்.
அத்துடன் பிரதேச மகளிர்களின் பனைக் கைப்பணிப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றன.