புத்தளம்: முன்னால் நிதித்திட்டமிடல் அமைச்சர் மர்ஹூம் அல்-ஹாஜ்.எம்.எச்.எம். நைனா மரைக்காரின் ஞாபகர்த்தமாக உருவாக்கப்பட்ட பெரிஸ்டர் நைனா மரைக்கார் பவுன்டேஷன் ஏற்பாடு செய்து நடத்திய மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா (2015.01.18) புத்தளம் நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது.
பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவர் ஹஸீப் நெய்னா மரைக்கார் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட காதி நீதவானும்,பதில் நீதவானும்,சட்டத்தரணியுமான அப்துல் காதர் கலந்து கொண்டார்.சிறப்பு உரையினை மன்பவுஸ் ஸாலிஹா அரபுக்கல்லுாரியின் பணிப்பாளர்,நாடறிந்த உலமா அஷ்ஷேய்க் றியாஸ்(தேவ்பந்தி) அவர்கள் ஆற்றினார்.தொழிலதிபர் எம்.நயீம்,முன்னால் கிராம அதிகாரி பீ.எம்.எம்.ஜனாப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மற்றும் போட்டிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் போட்டிகள் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(படமும் தகவலும் இர்ஷாத் றஹ்மத்துல்லா)