“நல்லிணக்கம், மீளிணக்கம் மைத்திரி ஆட்சியில் உதயமாகும்”: முபீன்

Mubeen– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: நாட்டை பீடித்துப் போயிருந்த அராஜகம் கடந்த ஜனவரி 8ம் திகதி எம்மை விட்டு நீங்கியுள்ளது. தாய் நாட்டு மக்கள் தங்களிடையிலான பேதங்களைத் துறந்து புதிய அரசாங்கத்தை புத்தாண்டில் நிறுவியுள்ளனர் என காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சனையின் எதிர் பாராத விளைவான உள் நாட்டு யுத்தம் ஈற்றில் கோரமுகங் கொண்டு குடி மக்களை வதம் செய்தது. முப்பது ஆண்டு கால உள் நாட்டு யுத்தத்தை முடித்;து வைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தின் ரணங்களை சுமந்த மக்களின் மனங்களை மேலும் ரணமாக்கி விட்டார்.

யுத்தத்தின் பின்னரான ஐந்து ஆண்டுகளில் நல்லிணக்க் மீளிணக்க செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை இன முரண்பாடுகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட உண்மையை கண்டறியும் செயன் முறை, பொது இடத்தில் தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளல்.

சுதந்திர காணி ஆணைக்குளுக்களுக்கு ஊடாக காணி பிணக்குகளைத் தீர்த்தல், இரானுவ கெடுபிடிகளில் இருந்து மக்களை மீட்டு சிவில் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் செயற்திட்டம், அதிகார கையளிப்பு உள்ளிட்ட எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

மாறாக நாட்டின் வாழும் இனங்கள் திட்ட மிட்ட அடிப்படையில் பிரிக்கப்பட்டனர். பெரும்பான்மை சிறுபான்மை என்ற பிரிவு நிலை ஊக்கப்படுத்தப்பட்டது.

பெருந் தேசிய வாதத்தை முன்னிலைப்படுத்தி அதிகாரத்தை அடைய துவேசக்கருத்துக்கள் விதைக்கப்பட்டன. நாட்டிற்குத் தேவையான நல்லிணக்கத்தை மறந்து மக்களைப் பாதித்து நாட்டைக் குட்டிச் சுவராக்கும் செயற்பாடுகளே அரங்கேறின.

இன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து நமது நாட்டுப் பற்றை நிரூபித்து நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளனர். சிங்கள மக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பல மாவட்டங்களில் மஹிந்த நிராகரிக்கப்பட்டுள்ளார். கம்பஹா, கொழும்பு, புத்தளம், கண்டி, பதுளை, நுவரலியா, பொலன்னறுவை உள்ளிட்ட சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்களில் மஹிந்தவின் கொள்கைகள் தோற்றுள்ளன.

சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் நிறுவியுள்ளனர்.

இன்று நல்லிணக்கம் மீளினக்கத்தை அனைத்து மக்களும் எதிர் பார்க்கின்றனர்.

இன,மத,மொழி வேறுபாடுகளைத் துறந்து ஒரு தாய் மக்களாக நம் மக்கள் அணிதிரண்டுள்ளனர். இவ்வொற்றுமையை உறுதிப் படுத்தி உண்மையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் எற்படுத்தி நிரந்தர அமைதிச் சூழலை உருவாக்கும் முக்கிய பொறுப்பு நாட்டின் தலைவரான மேதகு ஜனாதிபதி மற்றும ;பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கைகளிலேயே தங்கியுள்ளது என முபீன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s